Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 25, 2013

    சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் 27ம் தேதி வெளியீடு

    சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 27ம் தேதி வெளியாகிறது. எனினும், சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும், முன்கூட்டியே, இன்று காலை வெளியாகலாம் என, பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

    கடந்த மார்ச்சில், பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, அந்தமான் -நிகோபார், கோவா ஆகிய மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வை எழுதினர்.

    இதன் முடிவுகளை, பல நாட்களாக, மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, 20 நாட்களுக்கு மேல் ஆகின்றன. பொறியியல், மருத்துவம் படிப்புகளில் சேர, கடந்த, 20ம் தேதி வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கலந்தாய்வு, விரைவில் துவங்க உள்ளது.

    இதனால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவை, மாணவர்கள், ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், வரும், 27ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மாணவர்கள், தேர்வு முடிவை, http://www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

    No comments: