Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Friday, May 11, 2012

  ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.

  தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம். 1. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் - சோழர்கள்
  2. குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு

  3. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 7
  4. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு - 1/3 பாகம்
  5. மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை - 10 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
  6. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
  7. கிராம உள்ளாட்சியில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை - மூன்று
  8. மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது - கிராம சபை
  9. இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் - அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  10. ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக் காலம்  - 5 ஆண்டுகள்
  11. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10
  12. தனி அரசியல் அமைப்பு கொண்ட இந்திய மாநிலம் - ஜம்மு மற்றும் காஷ்மீர்
  13. இந்தியாவின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை - 4052
  14.  மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் - பர்மா
  15. இந்திய அரசியல் அமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவஹர்லால் நேரு
  16. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - இராஜேந்திர பிரசாத்
  17. இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் -  டாக்டர் இராதாகிருஷ்ணன்
  18. இந்தியாவின் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கமல்தேவி சட்டோபாத்தியா
  19.இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆணடு - 1950
  20. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1952
  21. சார்க் என்பதன் விரிவாககம் - தெற்காசிய நாடுகளின் மண்டலக் கூட்டமைப்பு
  22. கோட்டைகள் அதிகம் உள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா
  23. கன்னிமாரா நூலகம் முதன் முதலில் துவக்கப்பட்ட இடம் - புனித ஜார்ஜ் கோட்டை
  24. இந்தியாவின் முதல் நவீன நூலகம் - கன்னிமாரா நூலகம்
  25. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் - 10.07.1806
  26. வேலூர் கோட்டையை கட்டிய சிற்பி - பத்ரிகாசி இமாம்
  27. இத்தாலியின் இராணுவக் கோட்டை வடிவமைப்பில் அமைந்துள்ள கோட்டை - வேலூர் கோட்டை
  28. வேலூர் கோட்டையை கட்டியவர்- சின்ன பொம்மன் நாயக்கன்
  29. இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை
  30. புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் - சென்னியப்ப நாயக்கர்
  31. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே
  32. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639
  33. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு  தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006
  34. தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள்-டென்மார்க் நாட்டவர்
  35. அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு
  36. தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620
  37. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை
  38. சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி - செஞ்ஜி
  39. போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது - செல்லாதே
  40. போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது - தகவல் சின்னங்கள்
  41. கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்பட்ட கோட்டை - செஞ்சிக் கோட்டை
  42. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தர வேண்டும் - 5
  43. செஞ்சிக் கோட்டை அமைந்துள் மலை - கிருஷ்ணகிரி
  44. தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள் - 32
  45. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது - நீலகிரி மலை
  46. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் - கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்
  47. மேகாலயாவின் தலைநகரம் - ஷில்லாங்
   48. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
  49. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு - பக்ரா நங்கல்
  50. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
  Post a Comment