Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 14, 2012

    பள்ளிக்கல்வித்துறையில் மூன்று இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு.

    பள்ளிக் கல்வித் துறையில், ராமேஸ்வர முருகன் உட்பட மூன்று இணை இயக்குனர், இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை - இடைநிலைக் கல்வி, இணை இயக்குனராக இருந்த ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனராகவும், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் - தொழிற்கல்வி, மோகன்ராஜ், முறைசாரா கல்வி இயக்குனராகவும், நூலகத் துறை இணை இயக்குனர் பிச்சை, பாடநூல் கழக செயலராகவும் - இயக்குனர் நிலை, பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
    மேலும், தொடக்கக் கல்வி இயக்குனர் சங்கர், ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குனராகவும், நூலகத் துறை இயக்குனர் அன்பழகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும் - இயக்குனர் நிலை, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நூலகத் துறை இயக்குனராக அன்பழகன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், "நூலகத் துறை இயக்குனர் பதவியில் நியமிப்பதற்கு உரிய தகுதி அன்பழகனுக்கு இல்லை. எனவே அவரது நியமனம் செல்லாது' என, கடந்த மாதம், ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நூலகத் துறை இயக்குனராக, தகுதி வாய்ந்தவர் விரைவில் நியமிக்கப்படுவார் என தெரிகிறது. "ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, தனி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்படும்' என, தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி, தற்போது சங்கர் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    No comments: