Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 15, 2012

    ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை9.

    தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
    1. இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி
    2. தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம் 
    3. மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.
     4. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா
     5. தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - பிச்சாவரம் 
    6. இபின் பதூதவின் நாடு - மொராக்கோ 
    7. தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் - ஆனைமலை
     8. Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் - டாக்டர் அசிமா சாட்டர்ஜி
     9. ஒட்டக சவாரி காணப்படும் இடம் - ஜெய்பூர் 
    10. கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி - பாலக்காடு கணவாய் 
    11. உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் - ஸ்புட்னிக் 
    12. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு - நாய் 
    13. விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் - லைகா
    14. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரஷ்யா
     15. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை - ஸ்பேஸ் சூட்
     16. அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் - சுனிதா வில்லியம்ஸ்
     17. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் - கிரவுதர் பால் 
    18. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் - மான்ஸ்டர் ஸ்டார்
     19. தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் - இந்தியப் பெருங்கடல்
     20. அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்- பொதுத் துறை நிறுவனங்கள்
     21. மருத்துவ அவசர ஊர்தி எண் - 108 
    22. தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் - 101 
    23. காவல் நிலைய அவசர உதவி எண் - 100 
    24. பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு - மாநகராட்சி
     25. ஊராட்சி செய்து தரும் வசதிகள் - தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள் 
    26. நெல் விளைய தேவையான மண் - வண்டல் மண் 
    27. இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் உணவு - அரிசி 
    28. தமிழர்களின் அடிப்படை உணவு - அரிசி
     29. திண்டுக்கல் - பூட்டு
     30. சேலம் - மாம்பழம்31. தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை
     32. செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் -  விழுப்புரம் 
    33. குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி 
    34. வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம் 
    35. முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு ஆங்கிலேயருடன் போரிட்டவர் - ஜான்சி ராணி
     36. வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் - காஞ்சிபுரம் 
    37. பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிப்பது - கருஞ்சிட்டு 
    38. ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது - தவிட்டுக் குருவி 
    39. சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ் பெற்ற மாவட்டம் - திண்டுக்கல் 
    40. பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது - மாமல்லபுரம் 
    41. மாமல்லபுரத்தை கட்டியவர்கள் - நரசிம்ம வர்மன்
     42. மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் - குறிஞ்சி 
    43. காடும் காடு சார்ந்த பகுதியும் - முல்லை 
    44. வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் - மருதம்
     45. கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் - நெய்தல்
     46. மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் - பாலை
     47. APPLE - Ariance Passenger Payland Experiment Research 
    48. EDUSAT - Educational Satellite
     49. PSLV - Polar Satelite Launch Vehicle 
    50. GSLV  - Geo synchronous satellite launch vehicle

    No comments: