Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 6, 2012

    ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை 6.

    தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
    1.  பாண்டிய நாட்டின் பஞ்சத்தை குறிப்பிட்டவர் - யுவான் சிவாங்
    2. சியூக்கி எனப்படும் பயண நூலை எழுதியவர் - யுவான் சிவாங்

    3. தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் வந்தவர் - யுவான் சிவாங்
    4. யுவான் சிவாங் இந்தியாவில் தங்கியிருந்த காலம் - 12 ஆண்டுகள்
    5. யுவான் சிவாங் இந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு - கி.பி. 603 - 664
    6. யுவான் சிவாங்கின் சொந்த நாடு - சீனா
    7. யுவான் சிவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - ஹர்ஷர்
    8. இபின் பதுதாவின் காலம் - கி.பி. 1304 -1368
    9. மார்க்கோபோல சீனாவில் யாருடைய அரசவையில் பணி புரிந்தார் - குப்லாய்கான்
    10. மார்க்கோபோலோவின் காலம் -  கி.பி. 1254 - 1324
    11. மிலியொன் - 2 என்ற பயண நூல் எழுதியவர் - மார்க்கோபோலோ
    12. பார்தலோமியா டயஸ் யாரிடம் பணிபுரிந்தார் - போர்த்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்
    13. புயல் முனை என்று அழைக்கப்பட்டது - ஆப்ரிக்காவின் தென் முனை
    14. ஆப்ரிக்காவின் தென் முனைக்கு புயல் முனை என்று பெயரிட்டவர் - மார்க்கோபோலோ டயஸ்
    15. புயல் முனைக்கு நன்னம்பிக்கை முனை என்று பெயரிட்டவர் - போத்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்
    16. மெகல்லனின் சொந்த நாடு - போர்ச்சுகல்
    17. கடற்பயணம் செய்து முதன் முதலில் உலகத்தைச் சுற்றி வந்தவர் - மெகல்லன்
    18. மெகல்லன் நீர்ச்சந்தி என்று அழைக்கப்பட்ட இடம் - தென் அமெரிக்காவின் தென் முனை
    19. உலகப் பயணம் செய்த முதல் கப்பல் - விக்டோரியா
    20. இனங்களின் மூலம் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
    21. சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல் - பீகிள்
    22. இங்கிலாந்து நாட்டின் முதல் வரைப்படத்தினை வரைந்தவர் - தாலமி
    23. அமெரிக்காவை கண்டுபிடித்தவர் - வெஸ்புகி
    24. மேற்கு இந்தியத் தீவுகளை கண்டுபிடித்தவர் - கொலம்பஸ்
    25. கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் பெயர் - சாந்தா மாரியா
    26.கொலம்பசின் சொந்த நாடு - இத்தாலி
    27. முதன் முதலாக வரைப்படத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் - மெகல்லன்
    28. உலகம் உருண்டை என யாருடைய பயணம் மூலம் உறுதி செய்யப்பட்டது - மெகல்லன்
    29. அமைதிப் பெருங்கடல் என்று அழைக்கப்பட்டது - பசுபிக் பெருங்கடல்
    30. ஐரோப்பியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் வழியை கண்டுபிடித்தவர் - வாஸ்கோடகாமா
    31. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த ஆண்டு - 20.05.1498
    32. வாஸ்கோடகாமா முதன் முதலில் வந்தடைந்த இடம் - கள்ளிக்கோட்டை
    33. பூமியின் உள் அமைப்பை எத்தனை வரையாக பிரிக்கலாம் - நான்கு
    34. நெபுலாக்கள் என்பது - பெரு வெடிப்பு கொள்கையில் ஏற்பட்ட விண் துகள் கூட்டங்கள்
    35. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு - 93 மில்லியன் மைல்கள்
    36. பூமியில் மேற்பரப்பில் காணப்படும் நிலப்பகுதி - நிலக்கோளம்
    37. காற்று மண்டலம் நிலையாக இருக்கக் காரணம் - புவி ஈர்ப்பு விசை
    38. பூமியில் நிலம், நீர், காற்று மூன்றும் இணையும் பகுதி - உயிர்கோளம்
    39. கண்டப் பலகைகளின் மீது அமைந்த கண்டங்களின் எண்ணிக்கை - 7
    40. பூமி உருவான போது ஒன்றாக இருந்த பான்ஜியா பிரிந்து உருவானது - கண்டப் பலகைகள்

    No comments: