Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 12, 2012

    2 புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி!

    தமிழகத்தில், 2 புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் புதிதாக துவங்கப்படவுள்ளன. இதன்மூலம், இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் 34 இடங்கள் கூடுதலாக சேரும்.
    இதுதொடர்பாக, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபாகரன் கூறியதாவது: தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் விலங்கு பராமரிப்பு படிப்பிற்காக, 2 புதிய கல்லூரிகள் துவக்கப்படவுள்ளன.

    இதன்மூலம், இந்தக் கல்வியாண்டில்(2012 - 13), மாநிலத்தில், இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள், 226 என்பதிலிருந்து, 260 என்பதாக உயரும். மேலும், கால்நடை மருத்துவ படிப்பின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    கால்நடை அறிவியல் மற்றும் மீன்வளம் ஆகிய 2 துறைகள்தான், மென்பொருள் துறையைப் போல், ஒரே அளவில் வளர்ந்து வருகின்றன. இப்படிப்பை முடிப்பவர்களுக்கு, அரசுப் பணி கிடைக்கும் என்பதால், இப்படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    அதேசமயம், இத்துறை சார்ந்த படிப்பை முடித்தால், தனியார் துறைகளிலும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு ஆண்டும், 3700 கால்நடை மருத்துவ அறிவியல் பட்டதாரிகள் நாட்டிற்கு தேவைப்படுகிறார்கள். ஆனால் வெறும் 1800 பட்டதாரிகள் மட்டுமே வெளிவருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Bachelor of Veterinary Science and Animal Husbandry, Bachelor of Fisheries Science and Animal Husbandry, BTech in Food Processing Technology and BTech in Poultry Production Technology போன்ற படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்களை, கால்நடை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனங்களில், வரும் மே மாதம் 14ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

    No comments: