
விதி எண் 110 கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ . ஜெயலலிதா, தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார். மேலும், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த நிதி செலவிடப்படும் என்று கூறினார். இதுவரை இல்லாத அளவு உயர் ஒதுக்கீடாக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, இதன் மூலம் அரசு கல்லூரிகள் மேம்பாடு அடையும் என்று குறிப்பிட்டார். கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் நல்ல சூழ்நிலையில் உற்சாகத்துடன் கல்வி பயில்வதை உறுதி செய்வதில் தமது அரசு முனைப்பாக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment