Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 13, 2012

    01.01.2012 முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க உத்தரவு.

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 12.05.2012.
    தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2012 - 2013 ஆம் ஆண்டு 01.06.2012 அன்று ஏற்படும் உத்தேச காலிப்பணியிடங்களுக்கு 01.01.2012 தேதியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர்  பட்டியல் சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் 
    கூட்டம் நடத்தப்பட உள்ளது.
    இக்கூட்டத்திற்கு வரும் போது கடந்த ஆண்டு  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் ஒப்புதல் அளித்த (01.01.2011) முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர்  முன்னுரிமைப் பட்டியல் தவறாது கொண்டு வரவும்.
    மேற்கூறிய ஆய்வு கூட்டம் கீழ்காணும் பட்டியலின்படி நடைபெறவுள்ளது. 

    இடம்                    நாள்                           மாவட்டங்கள் 
    காஞ்சிபுரம்  -  17.05.2012 ( காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் )
    திருச்சி -            18.05.2012 ( திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர் )
    தஞ்சாவூர் -      18.05.2012 ( தஞ்சாவூர், நாகை, புதுகோட்டை, திருவாரூர் )
    ஈரோடு -            19.05.2012 ( ஈரோடு, திருப்பூர், கோவை,  நீலகிரி )
    சேலம் -              21.05.2012 ( கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல் )
    மதுரை - 23.05.2012 ( சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை,  தேனி, திண்டுக்கல் )
    திருநெல்வேலி-23.05.2012 (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்தக்குடி, விருதுநகர் )
    திருவண்ணாமலை-25.05.2012 (திருவண்ணாமலை, வேலூர், கடலூர் )
    மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் காலை 10.00 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    No comments: