Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, November 16, 2014

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக புகைப்படத்துடன் கூடிய மாற்றுச்சான்றிதழ் இணையம் வழியாக வழங்கி மாண்புமிகு அமைச்சர்கள் முதன்மை கல்வி அலுவலருக்கு புகழாரம்


    பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2014-2015 ஆம் கல்வியாண்டிற்கான புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான் அறிவியல் கண்காட்சி திறப்பு விழா இன்று 16.11.2014 (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.மனோகரன் தலைமை வகித்தார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான், ஆலங்குடி கு.ப.கிருஷ்ணன் , திருமயம் பி.கே.வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்து அறிவியல் கண்காட்சியைப்பற்றி பாராட்டி பேசினார்கள். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் வரவேற்று பேசினார்.
    விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியினையும், மாற்றுச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மாற்றுச்சான்றிதழ் வழங்கியும் , இந்த வருடம் நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்கள் பற்றி அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மலாலா அரங்கத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விழாப்பேருரை ஆற்றினார்கள் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் வி.சி.ராமையா, புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் ரா.ராஜசேகரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் ஆர்.சந்திரன் , புதுக்கோட்டை நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ். சேட் (எ) அப்துல் ரகுமான், 33 வது நகர்மன்ற உறுப்பினர் கு.ஆயிரம் வள்ளிக்குமார், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அருட்திரு.இராபர்ட்தன்ராஜ், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் க.கணேசன் , புதுக்கோட்டை  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) நா.செல்லத்துரை, புதுக்கோட்டை மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வர் ஆர்.சுசிலா, புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) ப.மாணிக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.ராதிகாராணி பிரசன்னா, அனைவருக்கும்  கல்வி இயக்க உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரவிச்சந்திரன் ,  தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்காட்சியின் அறிவியல் படைப்புகளையும், இதனை படைத்த மாணவர்களையும், அதற்கு தூண்டுகோலாக விளங்கிய தலைமையாசிரியர்கள் , ஆசிரியர், ஆசிரியைகளையும் வாழ்த்தி பேசினார்கள். இந்த அறிவியல் கண்காட்சியில் புதுக்கோட்டை கல்வி மாவட்டம் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆகியவற்றில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 106 ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் 212 மாணவ,மாணவிகள் செய்திருந்த சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட 106 படைப்புகள்  இடம் பெற்றிருந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு நிலையாக வைத்து நடுவர் குழுவினர் தேர்வு செய்ததில் பொன்பேத்தி , அரசு உயர்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை இராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டது. இதேபோல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு நிலையாக வைத்து தேர்வு செய்ததில் போசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, காமராஜபுரம், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, புத்தாம்பூர், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் 7 தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகளை நடுவர்குழுவினர் தேர்வு செய்ததில் புத்தாம்பூர் , அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கந்தர்வக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளி, போசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, கழனிவாசல், அரசு மேல்நிலைப்பள்ளி, அம்புகோவில், அரசு உயர்நிலைப்பள்ளி, காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பொன்பேத்தி அரசு உயர்நிலைப்பள்ளி, மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகள் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் மிகச்சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்டது.  அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மேற்கண்ட 10 படைப்புகளுக்கும் ரொக்கப்பரிசாக ரூ.1000/- ம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கண்காட்சியின் சிறப்பம்சமாக மாணவர்களிடம் அறிவியல் மனபான்மையினை வளர்க்கும் பொருட்டு இந்த வருடம் நோபல் பரிசு பெற்றவர்களின் சாதனைகள் குறித்து அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பில் மலாலா அரங்கம் அமைக்கப்பட்டு , குறுந்தகடுகள் மூலமாகவும், தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாகவும் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் ஆய்வு செய்து வெளிக்கொணர்ந்த 1907ம் ஆண்டு முதன்முதலாக புதுக்கோட்டையில் நடைபெற்ற ஸ்ரீசரஸ்வதி கண்காட்சி பற்றிய தகவலும், கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. அறிவியல் கண்காட்சியைப் பார்க்க வந்திருந்தவர்கள் நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்கள் குறித்து அமைக்கப்பட்ட அரங்கத்தினையும், புதுக்கோட்டையில் முதன் முதலாக நடைபெற்ற கண்காட்சி குறித்த தகவலையும் , காட்சிப்படுத்தப்பட்ட பள்ளிகள் அளவிலான மின் ஆளுமை நிர்வாகம் பற்றிய தகவலையும் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பற்றிய அரங்கத்தையும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இறுதியில் அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) ஆர்.சண்முகம் நன்றி கூறினார். கண்காட்சி ஏற்பாடுகளை தலைமையாசிரியர்கள் , ஆசிரிய, ஆசிரியைகளைக் கொண்ட விழாக்குழுவினரும் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்ட அலுவலர்களும் செய்திருந்தினர்.



    No comments: