Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 25, 2014

    தொடக்க கல்வித்துறை புதிய உத்தரவு ஆசிரியர்கள் உயர்கல்வி பயில அனுமதி பெற புதிய வழிமுறை

    தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயில சம்பந்தப்பட்ட துறையின் முன்அனுமதி பெறுவது அவசியம். இந்த அனுமதியை பெற உரிய அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

    நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் அஞ்சல் வழிக்கல்வி மூலம் மேற்படிப்பு பயில அனுமதி வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. எம்பில்., பி.எச்டி., ஆகிய மேற்படிப்புகளை அஞ்சல் வழியிலோ அல்லது பகுதி நேரமாகவோ, மாலைநேர வகுப்பு மூலமாகவோ பயில விரும்பும் ஆசிரியர்களுக்கு அவர்களது கடமை மற்றும் கற்பித்தலில் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றறிக்கையை அனைத்து உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு வழங்கிட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்புக்கு தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    4 comments:

    Unknown said...

    முன் அனுமதி பெற ஆசிரியர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்

    M. GOPAL, Teacher, DINDIGUL
    9486229370

    Unknown said...

    முன் அனுமதி பெற ஆசிரியர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்

    M. GOPAL, Teacher, DINDIGUL
    9486229370

    BASKI said...

    கடந்த பத்து வருடங்களாக இந்த அனுமதி யை உதவித் தொடக்க கல்வி அலுவலர் கள்தான் வழங்கி வருகின்றனர். அப்புறம் இது என்ன புதிய அறிவிப்பு ?

    Sun said...

    It is not a relevant circular, while AAEEO's and AEEO's are already giving such permissions.

    Perhaps this circular may be given on M.Phil and Ph.D only(?)