சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் நீர் வாரியத்தால் நடத்தப்படவுள்ள போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.
மத்திய நீர் வாரியம் சார்பில் நீரை சேமிப்போம்,வருங்காலம் காப்போம் என்ற தலைப்பில் நீர் வண்ண பூச்சு ஓவிய போட்டிகள் நடைபெற்றது.6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட 80க்கும் மேற்பட்ட மாணவர்களில் மாநில அளவில் கலந்துகொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.போட்டிக்கான நிகழ்ச்சியில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை முதல் தொகுதி நகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியை காளீஸ்வரி முன்னிலை வகித்து நீர் சேமிப்பது குறித்து விளக்கி பேசினார்.போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளில் மூவரை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.
8ம் வகுப்பு மாணவி மங்கையர்க்கரசி முதல் பரிசும்,7ம் வகுப்பு மாணவி தனம் இரண்டாம் பரிசும்,8ம் வகுப்பு மாணவி பூஜா மூன்றாம் பரிசும் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment