Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 13, 2014

    எலிகளுக்கான ஓட்டப்பந்தயமல்ல நம் வாழ்க்கை!

    இரு நண்பர்கள் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு கரடி தென்பட்டது. ஒருவன் செருப்பை கழட்டிவிட்டு, ஷூவை அணிய முற்பட்டான்.

    அடுத்தவன் கேட்டான். ‘ஷூ போட்டாலும் கரடியை விட வேகமாக ஓட முடியாது’ என்றான்.


    ‘உன்னைவிட வேகமாக ஓடினால் போதாது? கரடி உன்னை பிடித்துவிட்டால், கொன்று தின்பதில்தான் மும்முரமாக இருக்கும். என்னை துரத்தாது’ என்றான் இவன்.

    நடைமுறை வாழ்க்கையில் நட்புக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது. இருவரும் சேர்ந்து கரடியை எப்படி சமாளிப்பது என யோசிக்காமல் ‘அவன் மாட்டிக் கொண்டா<லும் பரவாயில்லை. நான் தப்பிக்க வேண்டும்’ என நினைப்பது இன்றைய காலகட்டத்தின் மிகப்பெரிய அவலம்.

    ஒரு புகழ் பெற்ற மருத்துவக் கல்லுõரி பேராசிரியை என்னிடம் சொன்னார்.

    ‘எப்படியோ மொட்டை கடம் போட்டு பிளஸ் 2வில் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று மருத்துவக்கல்லுõரியில் சேர்ந்துவிடுகிறார்கள். இங்கே மனப்பாடம் செய்து வெற்றி பெற முடியாது. புரிந்து கொண்டு படிக்க வேண்டும். பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.’

    அவளைவிட அழகாக இருக்க வேண்டும். ஆபிசில் பக்கத்து சீட்டுக்காரனை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும்.

    எல்லாருக்கும் இப்படி லட்சியங்கள் இருப்பதால் வாழ்க்கையே ஒரு எலிகளுக்கான ஓட்டப்பந்தயமாக மாறிவிட்டது. ‘இதில் பிரச்னை என்னவென்றால் எலிகளுக்கான பந்தயத்தில் ஜெயித்தாலும் நீங்கள் எலிதான்.’

    போட்டி மனப்பான்மை பொறாமைக்கு வழிவகுக்கிறது. பொறாமை அமைதியையும், மகிழ்ச்சியையும் திருடிக் கொள்கிறது. அது சரி பொறாமை என்பது என்ன? அடுத்தவர் <உயர்வில் நமக்கு இருக்கும் அமைதியின்மையே பொறாமை.

    இதை ஒரு கூட்டத்தில் சொன்னபோது 9தாவது படிக்கும் மாணவி கேட்டாள்.

    ‘போட்டி தானே திறமையை வளக்கிறது? அதை வேண்டாம் என சொல்கிறீர்களே?‘

    ‘அது இருக்கட்டும். படிப்பில் யாருடன் போட்டி போடுவாய்?’

    ‘என் வகுப்பில் இருக்கும் நீலாவுடன்’

    ‘ஆக உன் லட்சியத்தின் எல்லை கோட்டை நீலாவின் படிப்புதான் தீர்மானிக்கிறது. ஒருவேளை நீலா படிப்பில் சுணங்கிவிட்டால் நீயும் சுணங்கிவிடுவாயோ?’

    ‘அது வந்து’

    ‘போட்டி போடு. ஆனால் நீலாவுடன் இல்லை. மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவியுடன். நீலா உன் எல்லையாக இருக்க வேண்டாம். அந்த நீல வானமே எல்லையாக இருக்கட்டும்’

    எம்.பி.ஏ., மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டேன்... இந்த இரு வழிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    வழி 1: உங்களுக்கு ரூ ஆயிரம் லாபம் கிடைக்கும். போட்டியாக தொழில் செய்பவருக்கு ரூ.900 லாபம் கிடைக்கும்.
    வழி 2: உங்களுக்கு ரூ 2 ஆயிரம் லாபம் கிடைக்கும். போட்டியாளருக்கு ரூ 15 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

    ‘இதில் என்ன சார் சந்தேகம். முதல் வழிதான்.’ என துடிப்பான ஒரு பெண் சொன்னாள்.

    போட்டியாளருக்கு எவ்வளவு கிடைத்தால் என்ன? உங்களுக்கு எதில் கூட கிடைக்கிறதோ அந்த வழியை தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தானம்.

    கணக்கு ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்.
    2ஏ
    5பி
    இந்த இரண்டில் எது பெரியது என கேட்டார்.

    ‘5பி தான் சார் பெரியது’ ஒரு முந்திரிக்கொட்டை மாணவன் சொன்னான்.

    ‘2ஐயும் 5ஐயும் வைத்து முடிவு செய்து விட்டாய். ஒருவேளை ஏ என்பது தங்கமாக இருக்கலாம். பி என்பது வெள்ளியாக இருக்கலாம்.

    நாம் வெறும் எண்கள் அல்ல. நம்முடன் ஒட்டிக் கொண்டிருக்கும் எண்களை வைத்துக் கூட (மதிப்பெண்கள், வேலை, செல்வம், கார்) நமது மதிப்பை யாராலும் நிர்ணயிக்க முடியாது.

    இந்த அடிப்படை உண்மையை தெரிந்து கொண்டால், யாருடனும் போட்டி போட மாட்டோம். யாரைப் பார்த்தும் பொறாமை பட மாட்டோம்.

    - வரலொட்டி ரெங்கசாமி

    No comments: