குழந்தைகள் மீதான பாலியல்: தனியார் பெங்களூரு; குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு முதலமைச்சர் சித்தராமையா கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அவர் எச்சரித்து உள்ளார்.
குழந்தைகள் பள்ளிக்குள் சென்று விட்டால் பள்ளி நிர்வாகம் தான் அனைத்து பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துவிட்டனர்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது. இவ்விஷயத்தில் பெற்றோர், பொதுமக்கள் பயப்பட வேண்டியது இல்லை. குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை சம்பவங்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. மிருகங்கள் கூட இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கிடையாது.
இந்த சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். குழந்தைகள் மீது நடைபெறும் பாலியம் சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.
No comments:
Post a Comment