
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத மற்றும் கணித அடிப்படைச் செயல்களில் குறைந்த அடைவு உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை கிருஷ்ணன்கோவிலி்ல் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாணவர்களின் கல்வித் தரம் குறைவாக உள்ள 20 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 40 தலைமை ஆசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களிடம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பால்ராஜ், ஒவ்வொரு பள்ளிகள் வாரியாக ஏன் மாணவர்கள் அடிப்படைத் திறன்கள் கூட இல்லாமல் உள்ளார்கள். குறைந்த மாணவர்கள் இருந்தும் ஏன், அந்த மாணவர்களை ஆசிரியர்களால் தமிழ், ஆங்கிலத்தை வாசிக்க வைக்க இயலவில்லை என்று கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது: தொடக்கக் கல்வித் துறையில் உள்ள பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத மாணவர்களே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். கல்வித் தரத்தை உயர்த்திட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டு முடிவுக்குள் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் வாசித்தல், சொல்வதை எழுதுதல், கணிதத்தில் எளிய மற்றும் கடின கணக்குகளை செய்ய அறிந்துதான் அடுத்த வகுப்பிற்குச் செல்வதை தலைமை ஆசிரியர்கள் உறு்தி செய்ய வேண்டும் என்றார் அவர்.
2 comments:
THIS WILL MOTIVATE THE TEACHERS
THANGARAJ BRTE KPT
THIS WILL MOTIVATE THE TEACHERS
Post a Comment