Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 14, 2014

    அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவிகள்: கல்வித்துறை அதிரடி முடிவு

    மாவட்டத்தில் தொடர்ந்து விடுமுறை எடுக்கும் 475 மாணவிகள் குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    கடலூர் மாவட்டத்தில் இளம்பெண்கள் கடத்தல், காணாமல் போவது, பள்ளி நேரத்தில் மாணவ-மாணவிகள் பொது இடங்களில் சுற்றித் திரியும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடும்ப கவுரவத்தை கருதி பலர் போலீசில் புகார் கொடுக்க முன்வராத நிலையில் மாவட்டத்தில் பெண் கடத்தல் மற்றும் காணாமல் போவது தொடர்பான வழக்கு அதிகளவில் பதிவாகி வருகிறது.

    அனைத்திற்கும் மேலாக சிதம்பரம் அடுத்த எம்.ஜி.ஆர். திட்டில் உள்ள வாய்க்காலில் கடந்த 10ம் தேதி நிர்வாண நிலையில் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெற்றோர் மத்தியில், தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் இந்த கல்வியாண்டு துவங்கியதிலிருந்து பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் மாணவிகள் குறித்து பள்ளிகள் வாரியாக விபரம் சேகரித்தனர். அதில் டீன் ஏஜ் பருவத்தில் உள்ள 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகள் 475 பேர் அதிக அளவில் விடுமுறை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இவர்கள் பெற்றோர்களுக்கு தெரிந்தே விடுமுறை எடுக்கிறார்களா அல்லது பெற்றோர்களுக்கு தெரியாமல் பள்ளிக்கு வருவதை கட் அடித்துவிட்டு வெளியில் செல்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே அடிக்கடி விடுமுறை எடுக்கும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை பள்ளிக்கு வரவழைத்து உண்மை நிலையை அறிந்துக் கொள்வதோடு, மாணவிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    2 comments:

    Anonymous said...

    girls i kankanicha h.m matikolvare?enna seiya.......?pillaium killi vittu thotilaium aatuvath ithuthano.....?

    Anonymous said...

    Taking into consideration the current legal issues that the H.Ms and the teachers are facing, it is not possible for them to correct the children. Because the law does not favour the teachers but stands always by the students side even if the latter is at fault. In such case, the teachers would not feel like correcting the children, Ultimately, students lose basic values of life and become burden to the nation instead of bearing fruit. To conclude, teachers are helpless creatures, As a result, students take advantage of it and turn out out to be useless to the nation.