Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 6, 2013

    ஆசிரியர்கள் எம்.பில் படித்தால் மூன்றாவது ஊக்க ஊதியம் உண்டு

    எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற உத்தரவு அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

    மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே. நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். மணிக்குமார் இவ்வாறு உத்தரவிட்டார்.

      உத்தரவு விவரம்: ஆசிரியர்களின் அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளும் வகையில் கூடுதல் கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. மனுதாரர் எம்ஃபில் பட்டப்படிப்பு பெற்றதற்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க கோரியுள்ளார். ஏற்கெனவே எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அதையே மதுரை மாவட்ட கல்வி அலுவலரும் பின்பற்றி ஊக்க ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் அரசு அவ்வப்போது உத்தரவுகளை வெளியிடுகிறது.
      இந்த விஷயத்தைப் பொருத்தவரையிலும் ஊக்க ஊதியம் கோரிய மனுதாரரின் மனுவை நிராகரித்த மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
      மனுதாரர் மீண்டும் ஊக்க ஊதியம் பெறுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரி முறையாகப் பரிசீலித்து  நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு உத்தரவுகளைப் பின்பற்றி தகுந்த முடிவு எடுக்க வேண்டும்.
      உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் தனிநபர்களுக்காக பிறப்பிக்கப்படுபவையாக இருந்தாலும், அதன் உள்பொருள் எல்லாருக்கும் பொதுவானது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
      மனுதாரர் நாகசுப்பிரமணியம் தனது மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 2013, மார்ச் 28-இல் கே. லதாதேவி என்பவருக்கு எம்ஃபில் படிப்புக்காக 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.   
    அந்த உத்தரவை பின்பற்றி தனக்கும் எம்ஃபில் படிப்புக்கான 3-ஆவது ஊக்க ஊதியம் கேட்ட போது, அரசு உத்தரவு தனிநபருக்கானது என்று கூறி மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்து உள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

    9 comments:

    Unknown said...

    It will be useful if publish the judgement copy of this order and the contact address or number of the benefactors and the petitioner address to the mail id ghsmelakuppam632517@gmail.com

    Anonymous said...

    thanks to HC

    Anonymous said...

    Is it applicable for govt BT assist

    Anonymous said...

    please publish court order.

    Anonymous said...

    SO MANY THANK TO நீதிபதி எஸ். மணிக்குமார் AND மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே. நாகசுப்பிரமணியன்.உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் AND கே. லதாதேவி

    Anonymous said...

    Very Happhy. Already told only 2 increment totally in teacher's carrier. But now 3rd increment for M.Phil., ..... I am Govt. Teacher. B.A., B.Ed (Tamil / Economics), M.A.(Economics), Am I eligible for Increment (M.A. - Economics). Now I am working as a Tamil Teacher.
    Please tell me... thank U...

    Anonymous said...

    The government may go for an appeal in this regard.

    Anonymous said...

    I AM Very Happy. Already told only 2 increment totally in teacher's carrier. But now 3rd increment for M.Phil., ..... I am Govt. Teacher.M.A, B.Ed Tamil Am I eligible for Increment M.PHIL TAMIL. Now I am working as a SGGT Teacher.
    Please tell me... thank U...

    Unknown said...

    is s.g trs get third incentive for m.phil