ஆய்வக உதவியாளர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம் சில சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
அச்சந்தேகங்கள்:
எத்தகைய நடைமுறையின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்?வழக்கு தொடுத்தவர் ஓரு சந்தேகம் எழுப்பி உள்ளார். அது இன்டர்வியு அடிப்படையில் அல்லது தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எந்த அடிப்படையில் தேர்வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்பதாகும். மேற்கண்ட சந்தேகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment