Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 9, 2015

    யாரைத் தான் நம்புவதோ...?: தகவலில் தவறு செய்யும் பெரிய நிறுவனங்கள்

    உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் தேடுதல் உலவியும், பிரிட்டனின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான பிபிசி.,யும் முக்கிய தலைவர்கள் பற்றி தவறான தகவலை வெளியிட்டுள்ளன. அதற்காக அந்நிறுவனங்கள் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளன. இருப்பினும் இந்நிறுவனங்களின் தவறு, அவற்றின் மீதான நம்பகத் தன்மையை சற்றே அசைத்து பார்த்துள்ளது.


    கூகுளை நம்பலாமா? :


    எதைப் பற்றிய தகவலை கேட்டாலும் உடனடியாக முழு விபரங்களையும் கூகுள் நிறுவனம் தரும் என அனைவரும் நம்புகின்றனர். கூகுள் சொன்னால் உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சிலர், உலகின் டாப் 10 கிரிமினல்கள் பட்டியலை கூகுள் தேடுதல் உலவி மூலம் தேடி உள்ளனர். இதில் பிரதமர் மோடியின் படம் இருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மோடியின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் சமூகவலைதளங்களில் இந்த செயலுக்காக கூகுள் நிறுவனத்தை திட்டி தீர்த்து விட்டனர். இதனால் மிரண்டு போன கூகுள் நிறுவனமும் உடனடியாக மோடியிடம் மன்னிப்பு கேட்டது.


    பிபிசி.,நீங்களுமா? :


    பிரிட்டனின் அதிகாரப்பூர்வ செய்திகளை வெளியிடுவதால் உலக அளவில் பிபிசி., நிறுவனத்திற்கென தனி மதிப்பும், வரவேற்பும் உள்ளது. இந்நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில், எலிசபெத் மகாராணியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதால் அவர் லண்டனின் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என பதிவு செய்திருந்தது. சிறிது நேரத்திலேயே எலிசபெத் மகாராணி உயிரிழந்து விட்டதாக மீண்டும் டுவிட் செய்தது. இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. எலிசபெத் மகாராணி பற்றிய இந்த வதந்திக்கும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எலிசபெத் மகாராணியிடம் பிபிசி பகிரங்க மன்னிப்பு கேட்டது. அந்த செய்தியை பதிவு செய்த செய்தியாளர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.


    நம்பகமான தகவல் நிறுவனங்களாக கருதப்பட்ட இவ்விரு நிறுவனங்களின் தவறுகளும் அடுத்தடுத்து வெளிவந்ததால் இனி கூகுள் மற்றும் பிசிசி தரும் தகவல்களை நம்பலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் ஏற்பட்டுள்ளது. அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு தலைவர்கள் பற்றியே அப்பட்டமான பொய் தகவலை வெளியிடும் இந்நிறுவனங்கள் எப்படி, தெரியாத விஷயங்களை பற்றி உண்மை தகவலை தரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    No comments: