பிரபல தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஐடியா செல்லுலர் டெல்லியில் பிரீபெய்டு மொபைல் இண்டர்நெட் பேக்கின் விலையை அதிரடியாக 18 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பது இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐடியா நிறுவனம் சமீபத்தில் ரீசார்ஜ் பேக்குகளின் கட்டணங்களில் அதிக மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக, 2G மற்றும் 3G மொபைல் இண்டர்நெட் பேக்குகளில் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது டெல்லியில் மட்டும் உயர்த்தப்பட்டுள்ள இந்த விலை விரைவில் இந்தியா முழுவதும் 5 முக்கிய சர்க்கிள்களிலும் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த விலை உயர்வுக்கு கருத்து தெரிவிக்க ஐடியா நிறுவனம் மறுத்துவிட்டது. எனினும், கஸ்டமர் கேரிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 3G டேட்டா கட்டணத்தை 18 சதவீதமும், 2G டேட்டா கட்டணத்தை 11 சதவீதமும் உயர்த்தியுள்ளது. அதன்படி, இனி டெல்லியில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 1 GB 3G டேட்டா பேக் ரூ.295-ஆகவும், அதேபோல், 2G டேட்டா பேக் ரூ.195 -ஆகவும் இருக்கும்.
அதேநேரத்தில், பல ரீசார்ஜ் பேக்குகளின் வேலிடிட்டியையும் வெகுவாக குறைத்திருக்கிறது ஐடியா நிறுவனம்.
No comments:
Post a Comment