Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, August 3, 2014

    அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

    குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தொடக்கக்கல்வித் துறையின்கீழ் செயல்படும் சில அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருந்தும், 10 அல்லது அதற்கு குறைவான மாணவ, மாணவிகளே பயிலும் நிலை உள்ளது. இதுபோன்ற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடக்கக் கல்வித்துறை சார்ந்த டி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.


    இதன்படி,சிவகங்கை மாவட்டத்தில் 10 மாணவர் அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையிலான இளையான்குடி பகுதியிலுள்ள குறிச்சி, குக்குளம், பரத்திவயல், வாணியங்குடி, சுந்தரனேந்தல், இளமனூர் உள்பட 10 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரில் அழைத்து சிவகங்கையில் ஆலோசனை நடத்தினர். இதில், டி.இ.ஓ., ரவிக்குமார், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் பங்கேற்றனர்.

    நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடைநிற்றல் மாணவர்களை அந்தந்த வகுப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. டி.இ.ஓ., ரவிக்குமார் கூறுகையில், "முதல் கட்டமாக குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளி களில் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முடியாத பட்சத்தில் பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவுபடி, அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும்" என்றார்.

    3 comments:

    Anonymous said...

    Govt . Trs. Child ellaraium first Govt schoola admission poda solluinga surplus varathu Officers

    kathir said...

    U r r8

    இயற்கை விவசாயி said...

    அரசாங்க வட்ட வழங்கல் குடிமைப் பொருள் துறையில பணிபுரியும் ரேஷன் கடை விற்பனையாளர் முதல் தாசில்தார் வரை உள்ள பணியாளர்கள் அனைவரும் அவர்கள் துறையில் விநியோகிக்கும் அரிசியைத்தான் சமைத்துத் தின்ன வேண்டும் என்ற சட்டம் உள்ளதா?

    ஒரு அரசு மருத்துவர் தன்னுடைய குழந்தையை அரசாங்க மருத்துவமனைக்குதான் சிறு காய்ச்சல் என்றால்அழைத்துச்செல்கிறாரா???

    அவர்களிடம் ஏன் இதுபோன்று நீங்கள் கேட்பதில்லை?" 

    இப்படி இன்னும் உதாரனம் சொல்லலாம்.....

    எந்தப் பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்ற உரிமை பெற்றோரின் விருப்பத்திற்கு உட்பட்டது. அந்த உரிமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு நண்பரே ஆசிரியர் உட்பட......

    திண்டுக்கல்லிலிருந்து சிவசங்கர்