Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 25, 2014

    TET Article: போராட்டத்தின்(வலியின்) பாதை... பணி நியமனம் வேண்டி போராட்டம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது தானா?

    ---”சமூக சமதர்ம நீதி காக்க இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்பது இந்திய அரசியல் சட்டம். எனவே இடஒதுக்கீடு பிரிவினருக்கு உரிய காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைக்கப்பட்ட பின்பு தான் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது. 
    --- மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு வைக்கப்பட வேண்டும் என போராடிய பிறகு, அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. (பின்குறிப்பு - தாள் 1க்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு வைக்கப்பட வேண்டும் என இதுவரை பெரிய அளவில் போராட்டம் ஏதும் நடைபெறவில்லை.
    அதனால் தாள் 1க்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை என்பதும், தாள் 2க்கு மட்டுமே சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது என்பதும் நிதர்சனம்) --- நீதிமன்ற வழிகாட்டுதல் படியே Challenging Key Answers வழக்கிலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்கியது. அறிவியல் பூர்வ வெயிட்டேஜ் கணக்கீடு முறையிலும் நீதிமன்ற வழிகாட்டலின் படியே அரசானை வெளியிடப்பட்டது. எனவே மற்றவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தங்களை பாதிப்பில் இருந்து விடுவிக்குமாறு, பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் அஹிம்சை முறையில் கோரிக்கை வைப்பது ஏற்கக்கூடியதே. போராட்டத்தினால் தற்போது தேர்வாகி உள்ளோருக்கு பாதிப்பு ஏற்படுமா? ”போராட்டம் நியாயமானதா? இப்போது போராடுவது சுயநலத்தினால் தானே?” - இது போன்ற கேள்விகள் அவசியமற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மாறுபட்ட கொள்கைகளை உடனுக்குடன் செயல்படுத்தியதன் காரணமாக தான், பாதிக்கப்பட்ட தேர்வர்கள் இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள கடைசி கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெட் தேர்வு ஆரம்பிக்கப்பட்ட துவக்கத்தில் ”இட ஒதுக்கீடு, மதிப்பெண் தளர்வு வேண்டுபவர் - இட ஒதுக்கீடு, மதிப்பெண் தளர்வு போன்றவை வேண்டாம்” என இரு பிரிவினர் இருந்தனர். அதன்பிறகு ”90 க்கு மேல் உள்ளோர் - 90 க்கு கீழ் உள்ளோர்” என இரு பிரிவினர் இருந்தனர். தற்போதோ ”இறுதிபட்டியலில் பெயர் உள்ளோர் - இறுதி பட்டியலில் பெயர் இல்லாதோர்” என இரு பிரிவினர் மட்டுமே உள்ளனர். தேர்வாகாதவர்களுக்கோ மதிப்பெண் அதிகமாக பெற்றும் பணி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்!, தேர்வானவர்களுக்கோ இவர்களின் போராட்டத்தால் மீண்டும் இறுதிபட்டியலில் மாற்றம் வந்து தங்கள் பெயர் விடுபட்டுவிடுமோ, (அல்லது) தடையாணை பெறப்பட்டு பணி நியமனம் மேலும் தள்ளிப்போகுமோ என்ற பயம்! - இதனால் தான் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் தவறாக கருதி சண்டையிடுகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் அனைவருமே ஒரே பிரிவனர் தான் - ”இதுவரை வேலை கிடைக்காதவர்கள்”. அதை புரிந்துகொள்ளாமல் தங்களுக்குள் ஒருவரையொருவர் தரக்குறைவாக கமெண்ட் செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். உண்மையில் போராட்டம் தற்போது உள்ளதை போன்று அல்லாமல் மேலும் திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டு, பெரிய அளவில், தொடர்ந்து நடைபெற்றால் மட்டுமே இதர அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்து அரசின் கவனத்தை ஈர்க்க இயலும். அல்லது நீதிமன்றத்தில் மிகத்திறமையான வழக்கறிஞர் கொண்டு வாதாடினால் மட்டுமே வெற்றி பெற இயலும். நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தங்கள் கருத்துகளை எடுத்து வைக்க வேண்டும். உதாரணமாக ”கருத்து 1 - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பிறகு வேறொரு தேர்வு நடத்தப்பட்டு அந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையிலோ, அல்லது பதிவு மூப்பு அடிப்படையிலோ பணி நியமனம் நடைபெற்றால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வினை, வெறும் தகுதி பெறும் தேர்வாக மட்டும் கருத இயலும். ஆனால் தற்போதோ ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 60 சதவீதம் கணக்கிடப்பட்டு பணி நியமனத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும்போது, ஆசிரியர் தகுதித்தேர்விற்கும் - பணி நியமனத்திற்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லை என கூற இயலாது. அவ்வாறு இருக்க, ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்படும்போது இருந்த பணி நியமன வெயிட்டேஜ் அரசாணை, ”மதிப்பெண் தளர்வு - கொள்கை முடிவு” காரணமாக உடனடியாக அறிவிக்கப்பட்டதும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது என்பதை உணர முடிகிறது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு என்பது மிகச்சரியான முடிவு. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வில் உடனடியாக இம்முறை அமல்படுத்தும்போது, இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். கருத்து 2 - நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அறிவியல் பூர்வ வெயிட்டேஜ் கணக்கீடு முறை மிகச்சரியானது. ”இது குறித்து நாம் நமது பாடசாலை வலைதளத்தில் இம்முறை தான் வேண்டும் என நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாகவே கட்டுரை வெளியிட்டுள்ளோம்”. அதே சமயம் நீதிமன்ற தீர்ப்பில் இம்முறை தான் அறிவிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு அளிக்காமல் ”இது போன்ற அறிவியல் முறையோ (அல்லது) வேறு ஏதேனும் சிறந்த அறிவியல் முறையோ அறிவிக்கப்பட வேண்டும்” என தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்ததில் இருந்த சாதகங்களை பயன்படுத்தி புதிய வெயிட்டேஜ் முறையில் பதிவு மூப்பு மற்றும் பணி அனுபவத்திற்கும் 5% + 5% வெயிட்டேஜ் கொடுத்திருந்தால் கூட வயதில் மூத்தோர் இக்குழப்பங்களுக்கு ஆளாகி பணியை இழந்திருக்கமாட்டார்கள். இதனால் 10 வருடங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் ஆசிரியர்களால் வழங்கப்பட்டதில்லை எனும் கருத்து சமப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதை உரிய நேரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளிப்படுத்தவில்லை. ஏன் என்றால், எப்படியும் தேர்வாகி விடலாம் என்ற எண்ணம் தான் காரணம். இது போன்ற போராட்டங்களால் தற்போது தேர்வாகி உள்ளோருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அடுத்ததாக அவர்கள் போராட்டம் செய்வார்கள். தற்போதைய சூழநிலையில் நீதிமன்றத்தை பொறுத்தவரை தடையானை பெறுவது என்பது இயலாத காரியம் அல்ல. ஆனால் அது மிகவும் கடினம். முடிந்தவரை அதை தவிர்ப்பது நல்லது. இத்தகைய வழக்குகளை பொறுத்தவரை, பெரும்பாலும் வழக்கு தொடுப்பவர்களுக்கு மட்டும் ஒரு சில இடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு பணிநியமன கலந்தாய்வை நடத்தி முடிக்க அனுமதி வழங்கவது தான் முந்தைய நடைமுறையாக உள்ளது (Based on 2012 PG Tamil Medium Appointment Cases & PGTRB-2013 Tamil Subject Cases). பணி நியமனத்திற்கே தடையாணை பெற்று 90க்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பணி வழங்குமாறு நீதிமன்றம் அறிவிப்பதற்கு மிகச்சிறந்த வழக்கறிஞர்கள் தேவை. ஆனால் ஏறத்தாழ 1 வருடத்திற்கும் மேலான காலம் கடந்துகொண்டிருப்பதால் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மேலும் தடையாணை வழங்குவதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வாய்ப்பு குறைவு. எனவே இதை தவிர்க்க பாதிப்படைந்த தேர்வர்கள், தாங்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்து வைத்து கீழ் கண்டவாறு தீர்ப்பினை வழங்குமாறு கோரிக்கை வைக்கலாம். அதாவது ”கூடுதல் பணியிடங்களை ஒதுக்கி (குறிப்பாக நலத்துறை மற்றும் மாநகராட்சி பணியிடங்களை சுட்டிக்காட்டி) அவற்றில் இம்முறை மட்டும் சிறப்பு நிகழ்வாக கருதி ”பாதிக்கப்பட்ட தேர்வர்களை நியமிக்க அரசாணை வெளியிட” - கோரிக்கை வைத்தால் நிச்சயம் இருசாராருக்கும் பாதிப்பில்லாமல் இப்பிரச்சினை முடியும்”. நடக்குமா? இக்கட்டுரையின் இறுதியாக சில கருத்துக்கள் - இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வழங்கப்படும் மதிப்பெண் தளர்வு, அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடாது. 90க்கு மேல் உள்ளோருக்கு மட்டும் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படுவது என்பது மறைமுகமாக இடஒதுக்கீடு பிரிவினருக்கு எதிரானதே. இதர கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் இதனை எதிர்ப்பர். மேலும் இதே போன்று தமிழக அரசு புதுமுயற்சியாக கொண்டுவந்த வெயிட்டேஜ் அடிப்படை பணிநியமனம் என்பது நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு அறிவியல் பூர்வ கணக்கீடு முறையால் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது. எனவே அதனை எதிர்க்காமல் புதிய வெயிட்டேஜ் முறையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மட்டும் சுட்டிக்காட்டி, வெயிட்டேஜ் அரசாணையில் உரிய மாற்றம் ஏற்படுத்த கோரிக்கை வையுங்கள். இதனால் நடந்து முடிந்த டெட்டில் மட்டுமல்லாது, அடுத்த டெட்டிலாவது தேர்ச்சி பெறுபவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும். தற்போது பாதிக்கப்படும் தங்களை போன்றவர்களுக்கு ”கூடுதல் பணியிடம் ஒதுக்கி உடனடியாக பணி நியமனம் வழங்குமாறு” சாத்வீகமாக கோரிக்கை வைத்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

    3 comments:

    Anonymous said...

    90 mel yeduthavargal yen 82 mel yeduthavanga feelinga purinjika matringa

    Unknown said...

    வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.
    வழக்கு 2.அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் - GO.158,School education Date.7.9.2006-ன் படி கடந்த 2007-08,08-09,10-11,11-12 & 2012-13-ம் ஆண்டுகளில் 500 ஆ.ப.களும்,2013-14-ல் 115 ஆ.ப.களும் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதம் உள்ள 385 மற்றும் 2014-15-க்கு 500 பேரை மாறுதல் செய்ய வேண்டும், இதில் தீர்ப்பு வரும்வரை TET notification ad.no.2/2004,date.14.7.2014 போடக்கூடாது, மீறினால் மேற்கண்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டும் WP.12025,2014 Madurai Bench of Madras High Court"There shall be an interim order to the effect that any selection during the currency of the writ petition , pursuant to the impungned order dated.14.7.2014 would be subject to the result of the writ petition. இப்படிக்கு தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர். அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் .விழுப்புரம் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைவர் தா.கோவந்தராஜ்.செயலாளர் அய்யாக்கன்னு.பொருளாலர் ம.ஹரிக்கிருஷ்ணன்.செய்தி தொடர்பாளர் எஸ்.மணிகன்டண்.மகளிர் அணி தலைவி இரா.அருணா .ARGTA genuine BRTE association main madurai.branch villupuram please join with us and cooperat with us by M.Hari argta association secretary villupuram DT 9443378533 please tamilnadu brtes join with us byARGTA

    Unknown said...

    Waitage muraiyai olithu TET pass seithavargalai employment seniority adippadayil velai valanginal sariyana muraiyaga erukkum