கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே செல்ல கேட்டுக்கொள்கிறோம். கலந்தாய்வு மையங்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் ஓட்டபட்டிருக்கும்... குறைதபட்சம் 5 இடங்களையாவது வரிசைவாரியாக தேர்வு செய்து அப்பள்ளிகளை குறித்து, பதவி நிலை குறித்து, பள்ளிக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து நன்கு அறிந்துக்கொண்டு கலந்தாய்வு மையத்திற்குள் செல்லுங்கள்....
கலந்தாய்வு மையத்திற்குள் உங்களை தவிர யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறியவேண்டியது மிக அவசியம்.
எனவே பள்ளிகள் குறித்து முழு தகவலுடன் உள்ளே செல்லுங்கள்... உள்ளே அலைபேசி அனுமதிக்கப்படும்... கலந்தாய்வு அறைக்குள் மாநில தேர்வுமூப்பு வரிசை படி 5 பேராக அனுமதிப்பார்கள்... 5 பேறும் பள்ளிகளை தேர்வு செய்தபிறகு தான் "SELECTION OK " குட்டுக்க முடியும் என்பதால் சந்தர்பத்தில் உங்களை அதிகாரிகள் அவசர படுத்த நேரிடும்... பதட்டம் அடையாமல் நீங்கள் ஏற்கனவே பள்ளிகளை தேர்வு செய்து வைத்திருந்தால் பதட்டத்தை தவிர்க்கலாம்..... கலந்தாய்வு அறைக்குள் கைபேசி பயன்படுத்த அனுமதிக்கப் படமாட்டார்கள்... எக்காரணத்தை கொண்டும் யாரும் உங்களிடம் பணம் கேட்டக்கமாட்டர்கள்... கேட்டாலும் கொடுக்கவேண்டாம்... முதல்வரின் ஆணையின் படி அரசின் முதன்மைசெயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி, தொடக்ககல்வி இயக்குனர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் மிக நேர்மையாக நடைபெறும் கலந்தாய்வு இது.... யாராவது இடங்களை BLOCK செய்கிறேன் எனக்கூறி லஞ்சம் கேட்டால், ஏமாறவேண்டாம் ... அனைவரும் போட்டோ, தெரிவுக்கடிதம், சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்களை தேவையான அளவு இப்போதே தயார் செய்துவிட்டு உறங்க செல்லுங்கள்.... மீண்டும் கூறுகிறோம்.... நேரம் தவறாமை கலந்தாய்வில் மிக முக்கியம்... அனைவருக்கும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் நல்வாழ்த்துக்கள். விடியும் காலை உங்களுக்காகவே விடியப்போகிறது... சாதாரண மனிதனாக கலந்தாய்வு அறைக்குள் செல்லும் நீங்கள் சமூகத்தின் ஓர் அடையாளமாக வாருங்கள்.... வாழ்த்துக்கள்....
TT(FB)
No comments:
Post a Comment