Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, August 24, 2014

    சிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை???

    தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில்   தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    அதில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் & 2009 பொருந்தாது என கடந்த 6.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சியின்றி பணியமர்த்தப்பட்ட எங்களை, பணியில் இருந்து நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். பின் அவர் பிறப்பித்த உத்தரவில் 4 ஆசிரியர்களையும் பணியில் இருந்து நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தார். இதுதொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.

    3 comments:

    Anonymous said...

    what about secondary grade teachers salary issue

    Anonymous said...

    12.08.2014 antru anuppa patta pattathari list thiruthappatta listnu slringale athu eppati parkkirathu..plz tell me

    Anonymous said...

    intha order minorty section la varum aided school-kkum porunthuma?