Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 10, 2014

    நாட்டில் கூடுதல் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள்: மத்திய பட்ஜெட்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5 ஐ.ஐ.எம்.,கள்மற்றும் 12 புதிய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகள்

    * நாட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5 ஐ.ஐ.எம்.,கள் அமைக்கப்படும்

    * பல் மருத்துவ வசதியுடன் கூடிய, 12 கூடுதல் அரசு மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்


    * வேலை வாய்ப்பை பெறுவதற்கான பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்கும் திறன் இந்தியா திட்டம்(Skill India Programme) விரைவில் அறிமுகம்

    * நாட்டிலுள்ள அனைத்து மகளிர் பள்ளிகளிலும், தேவையான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்

    * பெண் குழந்தைகளின் கல்விக்கான, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் மேம்பாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * ஹிமாலயன் படிப்புகளுக்கான தேசிய மையத்தை உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், புதிய வேளாண் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்

    * தெலுங்கானா மற்றும் ஹரியானா மாநிலங்களில் புதிய தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும்

    * நாட்டின் இளைஞர்களிடையே தலைமைத்துவப் பண்பை வளர்க்கும்பொருட்டு, இளம் தலைவர்கள் திட்டத்தை(Young Leaders Programme) உருவாக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * மணிப்பூர் மாநிலத்தில் புதிதாக விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * வெகு விரைவில், நாட்டில், தேசிய விளையாட்டு ஆணையம் அமைக்கப்படுவதோடு, காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையங்களும் உருவாக்கப்படும்

    * புனேவிலுள்ள எப்.டி.ஐ.ஐ., கொல்கத்தாவிலுள்ள எஸ்.ஆர்.எப்.டி.ஐ., ஆகியவை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக தரம் உயர்த்தப்படும்.

    * முஸ்லீம் மத கல்வி நிறுவனமான மதரஸாக்களை நவீனமாக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * லோக் நாயக் ஜெய்ப்பிரகாஷ் நாராயண் பெயரில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு உயர்மதிநுட்ப மையம்(Centre of Excellence) அமைக்கும் திட்டம்

    * ஆசிரியர் பயிற்சிக்கான மதன் மோகன் மாளவியா திட்டம்

    * பருவநிலை மாற்றத்தைப் பற்றி ஆய்வுசெய்ய புதிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்

    * பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன், கைவினைக் கலைகள் தொடர்பான ஹஸ்ட்கலா அகடமியை மேம்படுத்த திட்டம்

    * சமூக ரேடியோ மையங்களுக்கு(Community Radio Centres), ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * தேசிய கிராமப்புற இணையம் மற்றும் தொழில்நுட்ப திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

    No comments: