Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 15, 2014

    மாணவர்களுக்கு அடையாள அட்டை: மாநகராட்சி பள்ளி அசத்தல்

    தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஐ.டி. கார்டு கல்வி வளர்ச்சி நாளில் வழங்கப்பட உள்ளது. ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. 89 மாணவர்கள், 69 மாணவிகள் என மொத்தம் 158 பேர் படிக்கின்றனர். மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், செயல்பாடுகளை பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் விதமாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக கடந்தாண்டு இப்பள்ளியில் "டைரி" முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


    இது பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. இரண்டாவது ஆண்டாக இம்முறையும் "டைரி" வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மாணவ மாணவியருக்கு இலவசமாக சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தனியார் ஸ்பான்சர்கள் சீருடை, டைரி ஆகியவற்றை மாணவ மாணவியருக்கு வழங்க பொருட்கள் தயார் செய்துள்ளனர். இந்நிலையில் முதன் முறையாக வேறு எந்த அரசு பள்ளிகளிலும் இல்லாத வகையில் மாணவ மாணவியருக்கும் ஐ.டி. கார்டு வழங்க திட்டமிடப்பட்டது. 158 பேருக்கும் ஐ.டி. கார்டு வழங்குவதற்கு ஆகும் செலவை ஏற்று கொள்ள தனியார் ஸ்பான்சர் ஒத்து கொண்டார்.

    இதையடுத்து மாணவ மாணவியருக்கு வழங்குவதற்காக ஐ.டி. கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கல்வி வளர்ச்சி தினமான 15ம் தேதி டைரி, சீருடை, ஐ.டி. கார்டுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு அத்தியாவசியான பொருட்கள் வழங்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

    3 comments:

    Anonymous said...

    jpUr;rp khtl;lk;> njhl;bak; xd;wpak;> ghyrKj;jpuk; Cuhl;rp xd;wpa Jtf;fg; gs;spapy; ,e;j rhjidia vy;yhk; vg;gNth nra;Jl;lhq;f…

    Anonymous said...

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம்ää பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இந்த சாதனையை எல்லாம் எப்பவோ செய்துட்டாங்க…

    Unknown said...

    kanchipuram dt, edayarpakkam village , p.u.p. school. we did this for the last 4 years. and from the last year we gave tie and belt for the students. ofcourse diary will be issued from this year on independence day. plz don't say as first time. many schools already did this