Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 19, 2013

    கூட்டுப் போராட்டம் கானல் நீரா? கொதித்தெழும் இடைநிலை ஆசிரியர்கள்

    6வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை களைய ஒவ்வொரு இயக்கமும் தன்னுடைய தனிப்பட்ட பலத்தை நிரூபித்தாகிவிட்டது. பலன் என்பது பூச்சியமாகத்தான் உள்ளது.  எனவே கூட்டுப்போராட்டம் ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு தள்ளுப்பட்டுள்ளோம்.
     இந்த நிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒன்றுதான் தன்னுடைய அதிகாரப் பூர்வமான இதழில் கூட்டுப்போராட்ட வேண்டுகோளை விடுத்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் மதிப்புமிகு தோழர் பாலச்சந்தர் கூட செய்தி தாட்கள் வழியாக தன் இயக்கத்தின் அவாவை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் மற்ற இயக்கங்கள் வாய் மூடி மவுனம் காப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் ஒவ்வாத செயலாகும்.  இதில் சில இயக்கங்கள் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்கங்களை இணைத்து ஒருங்கினைந்த போராட்டங்களை தன்னுடைய செயற்குழுவில் அறிவிக்கலாம் என செய்திகள் கசிந்துள்ளன.  அடிபட்டவனுக்கு மட்டுமே அதன் வலி தெரியும். இறக்கும் தருவாயில் உள்ளவனுக்கு அதை ஒத்த நிலைமையில் உள்ளவனோடு களம் கண்டால் மட்டுமே அது எழுச்சியான போராட்டமாக அமையும்.  அதைவிட்டுவிட்டு பலன் அனுபவித்து பஞ்சு மெத்தையில் உறங்குவபனை கூட்டி நான் உங்களுக்காக தேர் இழுக்க போகிறேன் என்பது நம்மை ஏமாற்ற போடும் நாடகத்தின் உச்சகட்டமாகத்தான் அமையும்.   அவர்களால் நமது இறுதி ஊர்வலத்தில் சம்பிரதாயத்திற்காக கலந்து கொள்ளும் உறவுகள் போல நமக்கு பாடை தூக்கும் அமங்கலமாக முடியும் என்பதில் மாற்று கருத்து இல்லை.  இறுதி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருக்கும் நம் உணர்வுகள் ஏன் மூத்த தலைவர்களுக்கு உரைக்க வில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.  இது யார் குற்றம்? ஏன் பதிலில்லை. நான் மற்ற இயக்கங்களை குறை கூற விரும்பவில்லை. ஆனால் இந்த நிலையில் என்னால் கோபத்தை அடக்க இயலவில்லை. இன்றைய இழப்பு என்பது நாளைய வரலாற்று பிழையல்லவா?.  எங்கே போயிற்று உங்கள் போராட்டகுணம்.  எங்களால் இயக்கம் வளர்த்தீர். எங்களை வளர்க்கவில்லையே?  ஏன் இந்த பாரா முகம். ஏன் இந்த தயக்கம்.  தொடக்கக்கல்வித்துறையில் உள்ள இயக்கங்களோடு களம் காண முயலுங்கள். மேல்நிலைப்பள்ளி இயக்கங்களோடு கைகோர்த்தால் போராட்டம் புஸ்வானமாகிவிடும்.  இந்த கோரிக்கையின் வலி அவர்கள் உணர வேண்டிய அவசியம் இல்லை. பொறுப்பாளர்களை தவிர்த்து மற்ற வர்கள் இந்த கோரிக்கைக்காக வீதிக்கு வர மாட்டார்கள்.  வேண்டாம் இந்த ஏமாற்று வித்தை.  இன்று இளைஞர்கள் பல பேர் வேலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களின் பலத்தை வீணடித்துவிடாதீர்கள்.  இயக்க தலைமைகள் மீது பற்றுள்ள பற்றாளர்களே உங்களின் பற்றினை மதிக்கிறேன். அதற்காக எங்கள் வாழ்வாதரத்தில் தங்கள் தலைமைகள் விளையாடுவதை வேடிக்கை பார்க்கப்போகிறீர்களா?.  இல்லை இயக்க தலைமைகள் கடவுளின் அவதார புருஷர்கள் என்று கண்மூடி அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு வெண்சாமரம் வீசப்போகிறீர்களா?.  இங்கே தீப்பற்றி எரிகிறது. தீப்பற்றி எரியும் வீட்டு உடமையாளனுக்கு மட்டுமே தன் இல்லத்தை காப்பற்ற வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும்.   ஆனால் சில தலைவர்களோ பொறுமையாக இருங்கள் நான் மாடி வீட்டுக்காரனை அழைத்து வருகிறேன் என்று நாம் தீக்கரையாகிய பின்னால் காப்பற்ற முடிவு எடுக்க முயலுகிறார்கள். அழிந்த பின்னால் அவதாரம் எடுத்து என்ன பயன்.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டுப்போராட்டத்திற்கு அழைப்பதால் அதனால் தனியாக போராட இயலவில்லை என்பது அர்த்தமல்ல.   இன்றைய அரசியல் சூழ்நிலையில் கூட்டுப்போராட்டம்தான் சரியான தீர்வு என்பதால்தான் இந்த அழைப்பு.  கடந்த கால வரலாறுகள் கூட சில இக்கட்டான நிலையில் கூட்டுப்போராட்டமே சரியான தீர்வாக இருந்துள்ளது.  எனவே நண்பர்களே ஈகோவை கை விட்டு வாழ்வாதாரம் இழந்து நிற்கின்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு குர ல் கொடுங்கள்.  நமது ஒட்டுமொத்த அவலகுரல் ஆட்சியாளர்களின் நித்திரையை கலைக்கட்டும்.  நம்மை திட்டமிட்டு பழிவாங்கிய அரசு அதிகாரிகளின் நரித்தனம் வெளியுலகிற்கு தெரியட்டும்.  குட்டுப்படும் கூட்டம் கொதித்தெழுந்தால் கோரிக்கை வெல்லாமல் அடங்காது என்பது அகில உலகிற்கும் தெரியட்டும். நாம் அறிவூட்டும் கூட்டம் மட்டுமல்ல. அநியாயத்தை தட்டிக் கேட்கும் கூட்டமும்தான் என்பதை உணர்த்துவோம்.  நமது உரிமையை மீட்டெடுக்கும் இந்த சுதந்திர வேள்வியில் குதிப்போம். மற்றவர்களையும் குதிக்க வைப்போம்.   சுயநலமாக சிந்திக்கும் தலைமைகளின் கோரப்பிடியிலிருந்து நம்மை விடு வித்துக்கொள்வோம். பொது நல சிந்தனையாளர்களின் பின்னால் அனி வகுப்போம்.  எப்பொழுது அடுத்த போர்களம் என்று நம்மை அலைபேசியில் துளைத்தெடுக்கும் இயக்க போராளிகளுக்கு விடை காண்போம்.   பொய்மைகள் பேசி நம்மை அடிமைகளாக்கும் பழங்கால சித்தாத்தங்களுக்கு விடை கொடுப்போம்.   கூட்டுப்போராட்டம் கானல் நீராக போய்விடாமல் உயிர் கொடுப்போம்.  நமக்கு எதிராக முக நூலில் பதிவிடும் வீணர்களின் பதிவுகளை புறந்தள்ளுவோம்.  தாங்கள் சார்நதுள்ள இயக்கத்தின் வட்டார, நகர, மாவட்ட, மாநிலப்பொறுப்பாளர்களிடம் கூட்டுப்போராட்டம் வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்றே அளிப்போம்.   காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நொடியும் நம் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்வோம்.  மற்றவர்களுக்கு இதை பகிர்வோம் . இதன் மூலம் நம் உணர்வுகளை மற்ற தலைவர்களுக்கு உணர்த்துவோம் .  நான் பல கட்டுரைகள் போராட்ட உணர்வு வேண்டி எழுதியுள்ளேன். தயவு செய்து மற்றவர்களுக்கு ப கிருங்கள். கட்டுரைகள் வேண்டும் நண்பர்கள் நம் இணையத்தளமான www.mptnptf.blogspot.com என்பதை click செய்து அறைகூவல் என்ற லேபிளை தேர்வு செய்யவும். தொடக்கக்கல்வித் துறையில் உள்ள ஒட்டுமொத்த இயக்கமும் கூட்டுப்போராட்ட அறிவிப்பினை ஒன்றாக வெளியிடும் மணித்துளிகளை உன்னைப்போல வே நானும் எதிர்பார்க்கிறேன். என்றும் இயக்கப் பணியில்..... முத்துப்பாண்டியன்.ஆ TNPTF மாவட்டத்தலைவர் சிவகங்கை மாவட்டம். cell: 9486-44-9129

    No comments: