Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 25, 2013

    எம்.பி.ஏ., படிக்கும் மாணவருக்கான அவசிய ஆலோசனைகள்

    படிப்பில் சிறந்து விளங்குபவராய் இருந்தாலும், இன்றைய போட்டி உலகில் வெற்றியாளராக விளங்க, எம்.பி.ஏ., மாணவர், ஓர் ஆல்ரவுண்டர் என்ற நிலையை அடைய வேண்டும்.

    பெரிய நிறுவனத்தில், ஒரு பொறுப்பு வாய்ந்த பணியை பெற வேண்டுமெனில், எம்.பி.ஏ., படிப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல், பல்வேறு அம்சங்களில், திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    எம்.பி.ஏ., படிக்கும் ஒரு மாணவர், எதிர்காலத்தில் சிறந்த பணி வாய்ப்புகளைப் பெற, தற்போது எதை செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாது என்ற ஆலோசனைகள் இங்கே தரப்படுகிறது.

    கடுமையாக படித்தல்

    இரண்டு வருட படிப்பின்போது, உங்களின் வகுப்புகள், லெக்சர்கள், வொர்க்ஷாப்புகள், அசைன்மென்ட்டுகள், டெஸ்ட்டுகள் உள்ளிட்ட படிப்பு அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவற்றை எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாது.

    நேர மேலாண்மை

    MBA படிப்பில், லெக்சர்கள், அசைன்மென்டுகள், ப்ராஜெக்ட்டுகள் போன்றவை நிறைந்திருக்கும். இதற்காக, நீங்கள் அதிகநேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே, உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை மிகவும் திட்டமிட்டு செலவழிக்க வேண்டியிருக்கும்.

    படிப்பு, extra curricular activities மற்றும் சமூக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்களுக்கும், உங்களின் நேரத்தை சரியான அளவில் பகிர்ந்தளிக்க வேண்டும். நேரம்தான் நம் வாழ்க்கையின் சிறந்த சொத்து. அந்த சொத்தை வீணாக்காமல் இருந்தால், நாம் பிற வகையான அனைத்து சொத்துக்களையும் எளிதாகப் பெறலாம்.

    திட்டமிட்டு செயல்படுதல்

    உங்களின் இலக்கினை தெளிவாக முடிவுசெய்து, அதை அடைவதற்கான செயல்பாடுகளை வரையறை செய்து, அதற்கேற்ப விடாமல் செயல்பட்டால், முடிவில் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். இதன் முதல் நடவடிக்கையாக, உங்களுக்கு ஆர்வமானது எது என்பதை அறிந்து, அதற்கேற்ப எம்.பி.ஏ., ஸ்பெஷலைசேஷனை தேர்வுசெய்து, உங்களின் கவனத்தை அதில் செலுத்தி வெற்றிகாண வேண்டும்.

    தனி ஸ்டைல்

    எம்.பி.ஏ., படிப்பு என்பது வெறுமனே, 4 முக்கிய சந்தை நுணுக்கங்களை கற்றுக்கொள்வது மட்டுமே அல்ல. அதையும்விட மேலானது. உங்களை எவ்வாறு பிரபலப்படுத்திக் கொள்வது மற்றும் உங்களின் இடத்தை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்பதை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கான ஒரு தனி USP -ஐ உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

    மேலும், ஒரு ஸ்பெஷலைஸ்டு சர்டிபிகேஷன் படிப்பில் நீங்கள் சேர்ந்து விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களின் சக போட்டியாளர்களை நீங்கள் முந்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    திறன்சார் நடவடிக்கைகள்

    விளையாட்டு, திறன்சார் நடவடிக்கைகள், விழாக்களில் பங்கேற்றல், சமூக கிளப் மற்றும் மீடியா கிளப்புகளில் சேருதல், தலைமைத்துவ நிலைக்கு போட்டியிடுதல் மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுதல் அவசியம். இவை அனைத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும், சிலவற்றையாவது கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், case studies, simulations, industry interaction programmes, inter-collegiate academic and extra curricular competitions உள்ளிட்ட குழு சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடல் வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள், உங்களின் தன்னம்பிக்கை மற்றும் அறிவு ஆகியவற்றை அதிகரிப்பதுடன், உங்களின் ரெஸ்யூமிலும் வலுவான அம்சங்கள் சேரும் என்பதை மறக்கக்கூடாது.

    பிரசன்டேஷன் மற்றும் செமினார்

    ஒரு எம்.பி.ஏ., மாணவர், பிரசன்டேஷன் மற்றும் செமினார் விஷயத்தில் சிறப்பாக செயல்படுவது முக்கியம். இத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் சாதாரணமாக நினைக்கக்கூடாது. இத்தகைய நடவடிக்கைகளின்போது, ஒரு நல்ல பேச்சாளராக நீங்கள் செயல்படுவது முக்கியம். Powerpoints, உங்களுக்கான முக்கிய உதவி உபகரணங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

    ஒரு விஷயத்தை நீங்கள் எப்படி present செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே, வித்தியாசத்தை காட்ட முடியும். எனவே, கடுமையாக முயற்சி செய்வது முக்கியம்.

    ப்ராஜெக்ட்டுகள்

    வணிக திட்டங்களை உருவாக்குதல், live cases, ஆராய்ச்சி பேப்பர்கள் மற்றும் ஸ்பெஷல் ப்ராஜெக்ட்டுகள் போன்றவை, ஒரு எம்.பி.ஏ., மாணவரின் வேலைவாய்ப்பு சாத்தியத்தை அதிகப்படுத்தும். ஒரு குறிப்பிட்ட பிரிவில் உங்களின் கவனத்தை செலுத்தி அதில் ஆராய்ச்சி மேற்கொண்டு தொடர்ச்சியாக செயல்பட வேண்டும். நீங்கள் எந்தளவு அதிகம் உழைக்கிறீர்களோ, எந்தளவு அதிகம் கற்கிறீர்களோ அந்தளவு அதற்கான வெகுமதியைப் பெறுவீர்கள்.

    சோஷியல் நெட்வொர்க்

    சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பங்கேற்பது ஒரு எம்.பி.ஏ., மாணவருக்கு உதவிகரமாக இருக்கும். பேஸ்புக், டுவிட்டர் மற்றும் LinkedIn போன்ற சமூக வலைதளங்களில் இணையும்போது, பல்துறை வல்லுநர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கலாம் மற்றும் அதன்மூலம் பல முக்கிய விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

    கடினமாக அல்ல, நயமாக...

    உங்களின் எதிர்காலம் பற்றி அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதை ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் போதும், உங்களுக்கான செயல்பாடுகளை திட்டமிட்டு, அதற்கேற்ப செயல்படத் தொடங்கவும்.

    மன அழுத்தத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. கடின உழைப்பு என்பதைவிட, நயமான, புத்திசாலித்தனமாக உழைப்பே சிறந்த வெற்றியைத் தரும்.

    நடப்பு நிகழ்வுகள்

    ஒரு எம்.பி.ஏ., மாணவர் தற்போது வணிக உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். வணிக நடவடிக்கைகள் மற்றும் மாற்றங்களை விடாமல் கவனித்து, அதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தவறாமல் செய்தித்தாள்கள் பார்த்து, வணிக செய்திகளை உன்னிப்பாக படிப்பது அவசியம்.

    மேலும், தொலைக்காட்சிகளிலும் வணிகச் செய்திகளை தவறாமல் பார்க்க வேண்டும். ஒரு எம்.பி.ஏ., மாணவர், வணிக நடவடிக்கைகள் பற்றி up to date என்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட செயல்பாடுகளில் பிரகாசிப்பதோடு, நிறுவன பொறுப்பில் அமர்ந்தபிறகும், வெற்றிபெற முடியும்.

    அனைத்தும் உங்கள் கையில்!

    படித்து முடித்து புதிதாக பணி வாய்ப்பை பெற்ற ஒரு எம்.பி.ஏ., பட்டதாரி, தனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு, வெறுமனே அமர்ந்திருந்து, அவர்கள் சொல்லும் வேலையை மட்டும் செய்தல் கூடாது. கல்லூரியைப் பொறுத்தவரை, உங்களுக்கு உதவ பலரும் இருப்பார்கள். ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அது ஒரு போர்க்களம். இங்கே போட்டிதான் அதிகம்.

    எனவே, உங்களுக்கு நீங்களேதான் உதவ முடியும் மற்றும் உங்களை நிரூபிக்க, நீங்கள்தான் போராட வேண்டும். ஏனெனில், உங்களின் இடத்தைப் பிடிக்க ஒருவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை மறக்கக்கூடாது. இதுபோன்ற நேரத்தில், இணையதளம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்கு தேவையான அறிவை அது வழங்கும்.

    பலம், பலவீனம்

    உங்களின் பலம் எது என்பதைக் கண்டுபிடித்து, அந்த அம்சத்தை மேலும் வலுவாக்க முயற்சியுங்கள். அதேபோன்று, உங்களின் பலவீனம் எது என்பதை அறிந்து, அதை பலமாக மாற்ற முயலுங்கள். இதுதான் உங்களின் ஒட்டுமொத்த பணி காலத்திற்கும் உதவக்கூடிய வளர்ச்சிக் காரணியாகும்.

    நெட்வொர்க்கிங்

    உலக வர்த்தக நடவடிக்கைகளில் வெற்றிகரமாக திகழ, ஒரு எம்.பி.ஏ., மாணவர், தனது தொடர்புகளை விரிவான அளவில் பெருக்கிக்கொள்வது அவசியம். உங்களின் வகுப்பில் தற்போது படிக்கும் சக மாணவர், எதிர்காலத்தில், ஒரு பெரிய வணிக உலக வெற்றியாளராக பரிணமிக்கலாம். எனவே, இதுபோன்ற சூழலில், உங்களின் தொடர்புகள் சிறப்பான அளவில் விரிவடைந்து இருக்க வேண்டும். அப்போதுதான் நினைத்ததை எளிதில் சாதிக்கலாம்.

    தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கையும், நேர்மறை சிந்தனையும், ஒரு வணிக மேலாண்மை மாணவருக்கு அவசியம் தேவையான அம்சங்கள். சரியான முயற்சியும், சரியான மனோவலிமையும் இருந்தால், முடியாதது ஒன்றுமில்லை. உங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தை விட்டொழியுங்கள்.

    உங்களுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, உங்களில் நம்பிக்கை வைத்து, வெற்றிகரமான மனிதராக திகழுங்கள்.

    பன்மை மேம்பாடு

    உங்களின் தகவல்தொடர்பு, பிரசன்டேஷன் மற்றும் மென்திறன்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நல்ல குழுப் பணியாளராகவும், தலைமைப் பண்புள்ளவராகவும் மாற்றிக் கொள்ளுங்கள். ஆளுமை மேம்பாடு, தகவல் தொடர்பு மற்றும் குழு அமைக்கும் நடவடிக்கை உள்ளிட்டவைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

    படிப்பு படிப்பு படிப்பு...

    படிப்பு என்பது பாடப்புத்தகம் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. பாடப் புத்தக அறிவு என்பது அடிப்படைகள் மட்டுமே. உலகின் பரவலான அம்சங்கள் பாடப்புத்தகங்களுக்கு வெளியில்தான் இருக்கின்றன. எனவே, முடிந்தளவு தேவையான விஷயங்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். பல்வேறான பத்திரிக்கைகள், ஜர்னல்கள், வணிகம் தொடர்பான பல்வேறான புத்தகங்கள் ஆகியவற்றை தொடர்ந்து படிக்க வேண்டும்.

    தலைவனாக இரு...

    ஒரு எம்.பி.ஏ., மாணவர் தலைவனாக முயற்சிக்க வேண்டுமே தவிர, ஒரு விஷயத்தை வெறுமனே பின்பற்றுபவராக இருத்தல் கூடாது. படிப்பின்போது, புதிய சில முயற்சிகளை செய்துபார்க்க தயங்கக்கூடாது. புதிதாக சிந்திக்கப் பழக வேண்டும். உங்களுக்குள் இருக்கும் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர முயல வேண்டும்.

    சமூக தொடர்பு

    மேலாண்மை படிப்பில் சேர்ந்து விட்டோம் என்பதற்காக, சமூக தொடர்பை துண்டித்துக்கொள்ளக்கூடாது. முடிந்தளவு சமூக குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சமூக சேவைகளை மேற்கொண்டு, உங்களின் சமூகத் தொடர்பை வளர்த்துக்கொண்டால், நேர்முகத் தேர்வின்போது, உங்களுக்கான பணி வாய்ப்பை உறுதிசெய்து கொள்வது எளிதாகும்.

    உடற்பயிற்சியும், தூக்கமும்

    உடற்பயிற்சி என்பது அனைத்து வயதினருக்கும் முக்கியமான ஒன்று எனும்போது, எம்.பி.ஏ., மாணவர்களும், அந்த விஷயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    யோகா போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடலாம். இதன்மூலம், மூளை சுறுசுறுப்பாக இருக்க முடியும். மேலும், முறையான தூக்கத்தைப் பராமரிப்பதும் முக்கியம். சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியம்.

    இன்டர்ன்ஷிப்

    இன்டர்ன்ஷிப் நடவடிக்கை என்பது உங்கள் எதிர்கால பணிக்கான ஒரு முதன்மை வாயிலாகும். நீங்கள் எதிர்காலத்தில் பணிபுரிய விரும்பும் தொழில் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்வது பெரிய நன்மையை உங்களுக்கு வழங்கும். பெரிய புகழ்பெற்ற நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்வதன் மூலம், நல்ல பணி அனுபவத்தையும், பணிச் சூழலையும் பெறுவதுடன், தேவையான அறிவையும் பெற முடியும்.

    வேலை வாய்ப்புக்கு நன்றாக தயாராகிக் கொள்ளவும். குழுக் கலந்தாய்வு, மாதிரி தேர்வுகள் ஆகியவற்றில் பங்கெடுக்கவும். ஆரம்பத்தில், சம்பளம் மற்றும் பதவி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், விரும்பும் பணியில் சேரவும். ஒரு பயிற்சிபெறும் நபராக பணியில் சேருகையில், அறிவையும், அனுபவத்தையும் வளர்த்துக் கொள்வதுதான் முக்கியம்.

    சந்தோஷமும் முக்கியம்

    படிப்பில் தீவிர கவனம் செலுத்தும் அதே வேளையில், உங்களின் வழக்கமான சந்தோஷத்தை தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. சரியான நேர மேலாண்மையை கையாண்டு, படிப்பையும், சந்தோஷத்தையும் சரிவர அனுபவிக்க பழகுவது ஒரு எம்.பி.ஏ., மாணவர் கற்றுக்கொள்ள வேண்டிய கலையாகும்.

    No comments: