Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 24, 2013

    பொறியியல் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த ஆன்லைன் படிப்புகள்!

    தமிழகத்தில் பொறியியல் கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் பலவிதமான ஆன்லைன் படிப்புகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 535 பொறியியல் கல்லூரிகளில், மொத்தம் 50,000 ஆசிரியர்களும், 6 லட்சம் மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பொறியியல் கல்வியின் தரம்தான் பரிதாபமாக உள்ளது. தரமான ஆசிரியர்கள் இல்லை. இதனால் தரமான மாணவர்கள் உருவாவதில்லை.

    பொறியியல் ஆசிரியர்களும், மாணவர்களும், ஐ.ஐ.டி.,களின் NPTEL மற்றும் MIT freeware மற்றும் Coursera ஆகியவற்றில் படித்து தங்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

    கடந்த சில வருடங்களாக, மாநிலத்தில் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகின. ஆசிரியர்கள் நியமனத்தில் என்னதான் AICTE விதிமுறைகள், வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் கூறினாலும், அது பொறியியல் கல்லூரிகளால் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.

    "பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் அறிவுத்தர குறைபாடுகளை நீக்க தமிழக அரசு விரும்புகிறது. எனவே, நல்ல ஆன்லைன் படிப்புகளை(MOOC - Massive Open Online Courses) மேற்கொண்டு, அதன்மூலமாக, அறிவைப் பெருக்கி, மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்க, அரசு வலியுறுத்துகிறது" என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரக கமிஷனர் குமார் ஜெயந்த் கூறினார்.

    தமிழக அரசு எடுத்துள்ள ஆன்லைன் படிப்புகள்(MOOC) தொடர்பான முடிவு சர்வதேச சூழலுக்கு ஏற்றபடி மேற்கொள்ளப்பட்டதாகும். பொறியியல் ஆசிரியர்களின் தரநிலைக் குறைபாட்டைப் போக்க, ஆன்லைன் படிப்புகளே சிறந்த வழியாகும்.

    "இந்த முயற்சி, அறிவுத் தேடலுக்கான ஒரு உந்துதலை வழங்கும் அதே நேரத்தில், முதுநிலை பொறியியல் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பை முடித்து, ஆசிரியர்களாக பணியில் சேரும் வகையில் போதுமான எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகளை, கல்லூரிகள் உருவாக்குவதை உறுதிசெய்யும் வகையில் முயற்சிகள் மேற்க¦ள்ளப்பட வேண்டும்" என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    No comments: