மதுரையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம், மாநில தலைவர் சுப்பையா தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரன் வரவேற்றார். நிர்வாகிகள் ஜம்பு, தமிழ்ச்செல்வம், சுரேஷ், நீலாவதி, வள்ளிவேலு உட்பட பலர் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் விஜயகுமார் தீர்மானங்களை விளக்கினார்.
முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசுக்கு இணையாக வழங்க வேண்டும். அரசாணை 720ல் திருத்தம் செய்து, பதவி உயர்வு வாய்ப்பு வழங்க வேண்டும். 2003-04க்கு பின் நியமனம் பெற்று 1.6.2006க்குப்பின் பணிவரன்முறை பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு, நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்யப்பட வேண்டும். உதவிபெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவியை, பணிமூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி, அக்.,4 முதல் 9 வரை பிரசார பயணம், அக்., 10ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment