Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, September 1, 2013

    புதிய பென்சன் திட்ட மசோதா நிறைவேறுமா? - ஆர்.இளங்கோவன்

    ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஞகுசுனுஹ) புதிய பென்சன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுதான் ஓய்வூதிய நிதியை கையாளுவதற்கான அறக்கட்டளை வங்கியையும், பதிவேடுகள் காப்பக நிறுவனத்தையும், அமலாக்க அறக்கட்டளையையும், ஓய்வூதிய நிதி நிர்வாக அமைப்புகளையும் (ஞகுஆ), பென்சன் வழங்கும் ஆனுவிட்டி கம்பெனிகளையும் நியமித்து செயல்படுத்துகிறது.

    இந்த ஆணையம் இப்போது இடைக்கால ஆணையமாக செயல்படுகிறது. அதன் பதவிக் காலம் இரண்டாண்டுகள்தான். அதன் பின் சட்டப்படியான ஆணையம் வந்துவிடும் என்று பாஜக மத்திய அரசு போட்ட இடைக் கால ஆணைய அமைப்பு உத்தரவு 2003ல் கூறியது.ஆனால், சட்டப்படியான ஆணையமில் லாமலே நிர்வாக உத்தரவு மூலம் புதிய பென் சன் திட்டம் 22.10.2003ல் பாஜக அரசு போட்ட உத்தரவு மூலம் மத்திய அரசு 1.1.2004 முதல் அமல்படுத்தி வருகிறது. அதன்பின் வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு முதலில் ஒரு அவசரச் சட்டம் மூலம் இந்த ஆணையத்தை சட்டப்பூர்வமாக்க முயன்றது. 6 மாதம்தான் அது செல்லுபடியாகும்.
    அதற்குள் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து அந்த ஆணையத்தையும் புதிய பென்சன் திட்டத்தையும் சட்டப்பூர்வமாக்கிவிடலாம் என்று காங்கிரஸ் ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அவசரச் சட்டம் காலாவதியாகும் முன் ஒரு மசோதா கொண்டுவர முடியவில்லை. 2005 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் “ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2005” என்பதை அறிமுகப்படுத்தியது. இடதுசாரிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா 14வது நாடாளுமன்றம் முடியும்வரை சட்டமாக நிறைவேற்ற முடியவில்லை. அந்த மசோதாவும் காலாவதியாகிவிட்டது.
    மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு 2011 மார்ச்சில்தான் அதே மசோதாவை சில திருத்தங்களுடன் தேசிய பென்சன் திட்டம் என்று (பெயர் மாற்றி) அறிமுகப்படுத்தியது. அப்போது அதற்கு பாஜக முழு ஆதரவும் அளித்தது.அந்த மசோதாதான் “ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011” என்று அழைக்கப்படுகிறது. ஐ.மு.கூட்டணி இதை நிறைவேற்ற போதிய உறுப்பினர் இல்லாததால் அது பாஜகவின் ஆதரவை நாடியுள்ளது. பல அரசியல் காரணங்களால் மசோதா நிறைவேற்ற பாஜக ஆதரவை தராமல் இழுத்தடித்து வந்தது.இதனால் இம்மசோதா நிதி அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப் பப்பட்டது.
    நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு பாஜகவின் யஷ்வந்த்சின்கா தலைவர். அந்த நிலைக்குழு 3 திருத்தங்களை முன்வைத்தது.
    1. ஓய்வூதிய நிதியிலிருந்து முக்கிய தேவைகளுக்கு பணம் எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.
    2. ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்கள் குறைந்தபட்ச லாபத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
    3. மசோதாவில் ஓய்வூதிய நிதி கம்பெனிகளுக்கு அந்நிய மூலதனம் வரலாம் என்றும் அது எந்த அளவு வரலாம் என்பது இன்சூரன்ஸ் திருத்த மசோதாவில் இருக்கும் உச்ச வரம்பைப் பொருத்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி உடனடியாக 26சதவீதம் வரலாம். அதற்கு ஏற்கனவே சட்டம் உள்ளது. திருத்த மசோதா 49 சதவீதத்தை இப்போது பிறப்பித்துள்ளது. சட்டம் நிறைவேறினால் ஓய்வூதிய நிதிக் கம்பெனிகளிலும் அந்நிய மூலதனம் 49 சதவீதம் வரலாம். நாளைக்கு 74 சதவீதம், 100 சதவீதம் என்று அந்த சட்டம் திருத்தப்பட்டால் அதுவும் இதற்குப் பொருந்தும்.
    அந்நிய கம்பெனிகளின் பங்குக்கு உச்ச வரம்பு ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011க்கு வெளியே இருக்கக் கூடாது. அந்த மசோதாக்குள்ளேயே அது நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நிலைக்குழுவின் பரிந்துரை.
    அதாவது மசோதாவுக்குள் 26 சதவீதம் உச்சவரம்பு வைத்தால் அதை உயர்த்த விரும்பினால் ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய சட்டத்தை தனியாக திருத்தினால் தான் உயர்த்த முடியும்.முதலில் காங்கிரஸ் ஐ.மு.கூட்டணி அரசின் அமைச்சரவை இந்த திருத்தங்களை நிராகரித்துவிட்டது. பாஜக இந்த திருத்தங்களை ஏற்றதால்தான் ஆதரவு என்றது.
    இப்போது மத்திய அமைச்சரவை இரு திருத்தங்களை ஏற்க முடிவு செய்துவிட்டது. அதன்படி
    1. ஊழியரின் பங்கிலிருந்து 25 சதவீதம் வரை கடன் பெறலாம். அரசின் பங்கில் கடன் கோர முடியாது. எதற்காக, எத்தனைமுறை, எவ்வளவு வரை கடன் பெறலாம் என்பதை ஆணையம் முடிவு செய்யும்.
    2. மசோதாவுக்குள்ளேயே ஓய்வூதிய நிதி கம்பெனிகளில் அந்நிய மூலதனம் 26 சதம் வரை வரலாம் என்று சேர்க்கப்படும்.
    இன்சூரன்ஸ் திருத்த மசோதா அந்த உச்ச வரம்பை 49 சதவீதமாக்க ஆகஸ்ட் 14 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக என்று முன்வைக்கப்பட்டது. பட்டியலில் இருந்தது.ஆனால், அரசியல் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் எதிர்ப்பால் அது பின் வாங்கப்பட்டது. சிதம்பரம் கருத்தொற்றுமை இல்லாததால் பின்வாங்கப்பட்டதாகவும் கருத்தொற்றுமை ஏற்பட்டால் நாளையே நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
    PFRDA மசோதா 19.8.2013 அன்று முதல் தினந்தோறும் பட்டியலில் வைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் பல காரணங்களால் முடங்கி நேரமின்றி நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 30.8.2013 வரைதான் நாடாளுமன்றக் கூட்டத்தொடர். இரு கட்சிகளும் விவாதத்தைத் தவிர்க்க நாடாளுமன்றத்தை முடக்கி சதி செய்துவிட்டு கடைசியில் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்ற சதி செய்கிறார்களா என்பது பரிசீலனைக்குரியது.பாஜகவின் திருத்தங்களை ஏற்றாலும் மசோதா சட்டமானால் புதிய பென்சன் திட்டம் ஒழியாது. திருத்தங்கள் புதிய பென்சன் திட்டத்தை ஒழித்து பழைய பென்சனை கொண்டு வரும் நோக்கில் இல்லை என்பதை புரிந்து கொண்டால் பாஜகவும் காங்கிரசும் ஒண்ணு உழைப்பவன் வாயில் மண்ணு என்பதை புரிந்துகொள்ளலாம்.
    அறக்கட்டளை வங்கி : இதுவரை பேங்க் ஆஃப் இந்தியா தான் அரசு ஊழியர் நிதிகளை கையாண்ட வங்கியாக இருந்தது. இது தேசிய வங்கி என்று அனைவருக்கும் தெரியும். இந்த சட்ட விரோத இடைக்கால ஆணையம் இப்போது தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியை 2013 ஜூலை 1 முதல் அறக்கட்டளை வங்கியாக நியமித்துள்ளது.
    ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்களும் அறக்கட்டளை வங்கியும் தனியாரானால், பின் அந்நிய மூலதனமும் வந்தால் வெனிசுலாவில் ஓய்வூதிய நிதியை எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடித்தது போல போய்விடும்.
    பங்குச்சந்தையில் மூலதனமிடவே பணமிருக்காது. மேற்கு வங்கம், திரிபுரா தவிர அனைத்து மாநிலங்களிலும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் மேற்குவங்கம் கேரளா, திரிபுரா அரசில் இருந்த போது தடுத்துவைத்தனர். கேரளாவில் 1.4.2013 முதல் புதிய பென்சன் திட்டம் அமலாகிறது. அந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கூட செய்துவிட்டனர். ஆணைய தலைவரின் கூற்றுப்படி இந்தியாவில் இதுவரை 53 லட்சம் பேர் இந்த திட் டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    பெரும்பாலும் கட்டாயமாக சேர்க்கப்பட்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள்தான். அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டாலும் அவர்கள் விரும்பினால்தான் சேரலாம் என்பதால் மற்றவர்கள் யாரும் தங்கள் அசலை இழக்க விரும்பவில்லை. ஆதலால் சேரவில்லை.நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி அமைச்சர் கொடுத்த ஒருபதிலில் 2012-13ல் 47,70,503 பேர் சேர்ந்திருப்பதாகவும் அவர் களின் மொத்த ஓய்வூதிய நிதி ரூ.29852 கோடி என்றும் கூறியுள்ளார். 17.8.2012ல் ரூ.17,623 கோடி இந்த நிதியாக இருந்தது என்றும் அதில் மத்திய அரசு ஊழியர்களின் பங்கு ரூ.11,315 கோடி என்றும் மாநில அரசு ஊழியர்களின் பங்கு ரூ.5500 கோடி என்றும் மற்ற தனியார் கம்பெனிகளிடம் இருந்து வந்தது வெறும் ரூ. 801 கோடி என்றும் தெரிகிறது.
    கட்டாயமாக்கப்பட்ட மத்திய- மாநில அரசு ஊழியர்களின் பங்குதான் கூடி வருகிறது என்பதை பார்க்கலாம். இப்படி மசோதா நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேறாமல் இழுக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. நாடாளுமன் றத்திற்குள் காங்கிரசும் பாஜகவும் கூட்டு சதி செய்தாலும் வெளியே அவர்களின் ஐ.என்.டி. யு.சி.யும். பி.எம்.எஸ்-சும் இடதுசாரி மற்றும் போராடும் சங்கங்களுடன் இணைந்து தேசிய அளவில் 2012 பிப்ரவரி 28லும் 2013 பிப்ரவரி 20-21லும் செய்த வேலைநிறுத்தங்கள். அவர்களுக்கு முழுவதுமாக ஆதரிக்க தைரியத்தை அளிக்கவில்லை.
    வெளியே போராட்டம் தீவிரமானால் மசோதா இந்த 15வது மக்களவையிலும் நிறைவேறாது. மத்திய அரசு ஊழியர்கள் வாக்கெடுப்பு வரும் தினத்தில் 2 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். ரயில்வேயும் சேர்ந்தால் பலன் அதிகம் இருக்கும்.
    தமிழக அரசு : அனைவருக்கும் 1.1.2004 முதல் புதிய பென்சன் திட்டம் அமலானால் தமிழகத்தில் மட்டும் 1.4.2003 முதலே அமல்படுத்தப்பட்டு விட்டது. அமல்படுத்தியது அண்ணாதிமுக அரசு. அதன் பின் வந்த திமுக அது நல்லது என்று கண்டது. அதைத்தொடர்ந்தது.
    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கடைசி தினத்தில் ஜெயலலிதா அவர்கள் புதிய பென்சன் திட்டத்தை வாபஸ் வாங்குவேன் என்று அறிவித்தார். அதற்கேற்றாற்போல மசோதா 2011 மார்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இடதுசாரிகளோடு சேர்ந்து அதிமுக எதிர்த்து வாக்களித்தது.
    ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் அறக்கட்டளை வங்கிக்கு இப்போது அனுப்பப்பட்டு எல்லா ஊழியர்களிடமும் நிரந்தர ஓய்வுக் கணக்கு எண் (ஞசுஹசூ) வழங்க கையெழுத்து வாங்கப்படுகிறது. தமிழக அரசு மசோதாவை எதிர்ப்பது நல்லது. ஆனால் தமிழகத்திலும், மேற்கு வங்கம், திரிபுரா போல திட்டத்தைக் கைவிடாமல் மறுப்பது சரியா? என்று சிந்திக்கவேண்டும்.

    No comments: