கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
அதில் கூறியிருப்பது: கடன் விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கடன் தொகை மீதான வட்டியைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆண்டுக்கு ஒருமுறை சந்தா, கடன் தொகை கட்டியதற்கான அறிக்கை வழங்கப்படும்.
தகவல்கள் அனைத்தும் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும். ஆர்.டீ., எம்.டீ., நிதியைப் பயன்படுத்தி விரைவான உறுப்பினர் கடன் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
அனைத்து வரவு, செலவு கணக்குகளும் கணினி மயமாக்கப்படும். சம்பளப் பிடித்தத்துக்கான புதிய மென்பொருள் உருவாக்கப்படும். வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் லாப ஈவுத்தொகையைப் பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவு செய்யும் நாளில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
மாறுதல், சந்தாவைக் கட்ட மறுத்து சென்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அதன் மூலம் சங்க நிதி திரும்பப் பெற முயற்சிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களையும் ஏ கிரேடு உறுப்பினர்களாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என, அந்தத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment