
மாநிலத் தலைவர் திரு கோ.காமராஜ் அவர்கள் இயக்க உரையாற்றினார். ஈரோடு மாநகராட்சியின் 3வது மண்டலத் தலைவர், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயரின் சார்பில் அவரது நேர்முக உதவியாளரும், மாநகராட்சி அலுவலர்களும், அரசூழியர் சங்க மாவட்டச் செயலாளரும் பல்வேறு வட்டாரச் செயலாளர்களும் வாழ்த்துரை வழங்கினர். பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் பணிநிறைவு பெற்ற ஆசிரியருக்கும் டெல்லி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்ட போராளிகளுக்கும் பொன்னாடை அணிவித்துப் பரிசு வழங்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் நன்றி கூறினார். அனைவருக்கும் உயர்தர உணவு வழங்கப்பட்டு விழா சிறப்புற நிறைவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment