Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 22, 2013

    ஜூன் 9ல் மாவட்டங்களில் பேரணி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

    21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 9ல் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.
    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் பேசியதாவது:இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை வரும் கல்வி ஆண்டில் முழுமையாக நிரப்ப வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை தீர்ப்பதற்காக தமிழக அரசு மூவர் குழுவை நியமித்தது. அந்த குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களுடன் பரிந்துரைகள் குறித்து பேச்சு நடத்தி உரிய தீர்வுகளை காண அரசு முன்வர வேண்டும்.ஆசிரியர் மன்றத்தின் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 9ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    No comments: