Pages

Monday, December 31, 2012

10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதஉள்ளனர். பத்தாம்‌ வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10லட்சம் பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.
SSLC PUBLIC EXAM 2013 DATES27.03.2013 - Tamil Paper 1

பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு விரைவில் தேர்வு முடிவு வெளியாகும்


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் மொத்தம் 465 பேர் தேர்வு எழுதினர்.

நேர்முக தேர்வு நடத்தியவர்களின் பெயரை வெளியிட முடியாது - உச்சநீதிமன்றம் உத்தரவு.


அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம் பெறும் நபர்களின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

அரசு கல்லூரி துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைப்பு

அரசு கல்லூரிகளில், தூய்மை பணி மேற்கொள்ள, தனியார்களை பயன்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக, சென்னை கல்லூரிகளில், இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது, தனியாக பள்ளி நடத்தினால் புகார் அளிக்கலாம், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 435

தொடக்கப் பள்ளி கூட்டணி சார்பில் ஜன.,5ல் தற்செயல் விடுப்பு ஆசிரியர்கள் முடிவு

மதுரையில், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், தற்செயல் விடுப்பு (சி.எல்.) எடுத்து ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழக அரசின் மூன்றாவது பெண் தலைமைச் செயலாளராக திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்பு

 
தலைமை செயலராக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், இன்று பொறுப்பேற்கிறார். நகராட்சி நிர்வாகம்மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் செயலர் பதவிவகித்த ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக அμசின், புதிய

யாரிடமாவது ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால் தூக்கிலிடுங்கள் : திரு.சகாயம் எழுதிய உருக்கமான கடிதம்

உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது.

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் குளறுபடியால் தேர்வான ஆசிரியர்கள் தவிப்பு

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தேர்வான ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடியால் தவித்து வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் 2895 காலிப்பணியிடங்களுக்கு, முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான தேர்வுகள் நடந்தது. இதில் வழக்கு காரணமாக 587

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் பட்டினிப் போராட்டம்

 
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் இன்று (29.12.2012) காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அருகில் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை

நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி பாடத் திட்டத்தில் மறுஆய்வு தேவை என்று தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் சிதான்சு எஸ்.ஜெனா கூறினார்.

இணையதளங்களால் மழுங்கடிக்கப்படும் இளைய தலைமுறையினர்

இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை" தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல்

Sunday, December 30, 2012

10ம் வகுப்பு மாணவர் விவரம்: ஜனவரி 23 வரை காலக்கெடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டு அரசாங்கப் பள்ளி ஆசிரியைகளின் சீருடை

தமிழ் நாடு அரசாங்கத்தின் பள்ளிக் கல்வி ஆணையம் 29-ம் தேதி ஜூன் மாதம் 2012 அன்று பிறப்பித்த ஆணையில் ஆசிரியைகளுக்கு பணிச் சீருடை புடவை என்று மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளது தவறானதா அல்லது சரியானதா ?

தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு:​ நாடு முழு​வ​தும் 7.8 லட்​சம் பேர் பங்​கேற்பு

பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு (யு.ஜி.சி.)​சார்​பில் தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு சென்னை உள்​பட நாடு முழு​வ​தும் இன்று (டிசம்​பர் 30) நடை​பெ​று​கி​றது.​மொத்​தம் 77 மையங்​க​ளில் நடை​பெ​றும் இந்​தத் தேர்வை 7.8 லட்​சம் பேர் எழு​து​கின்​ற​னர்.​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ளர் தகுதி பெற புதிய விதி​மு​றை

கூட்டுறவு சங்க நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

பலத்த மழையால், கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களில், 3,589 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு, கடந்த, 9ம் தேதி, எழுத்து தேர்வு நடந்தது. தேர்வில் வெற்றி

தமிழ் இணைய மாநாட்டில் சிறுவர்களுக்கான பொது அறிவு சிடி

சிதம்பரத்தில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் சிறுவர்களுக்கான பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் சிடி மற்றும் டிவிடிக்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கண்காட்சியில் 20 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

டிசம்பர் 31ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு - Dinamalar

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது.

Saturday, December 29, 2012

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் கலந்தாய்வு - Dinamani

தமிழக முதல்வரால் 13.12.12 அன்று ஆணை வழங்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு  பள்ளிக் கல்வித்துறையால் பள்ளிகளில் நியமன ஆணை திங்கள் கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு மூலம் வழங்கப்படவுள்ளது.

100% தேர்ச்சிக்கு மாணவர்கள் இடைநீக்கம்: பெற்றோர் குற்றச்சாட்டு

பொது தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சியை காண்பிக்க வேண்டும் என்பதற்காக, கல்வியில் பின்தங்கிய மாணவர்களை, அரசு பள்ளி தலைமையாசிரியர் கட்டாய இடைநீக்கம் செய்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுதோறும் வளர்ச்சிப் பணிகளாக, கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிப்பறை வசதி, சுற்றுச்சுவர் கட்டப்படும்.

அரசு பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை மீண்டும் மாற்றம்

அரசு பள்ளிகளின் அரையாண்டு விடுமுறையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி முடிந்து, ஜனவரி 1ம் தேதியிலிருந்து, விடுமுறை ஆரம்பிக்கும். விடுமுறை முடிந்து, 21ம் தேதி அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. 2011-12ஆம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை

புதன்கிழமைகளில் கதர் ஆடை அணிங்க! அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

கேரள மாநில அரசு ஊழியர்கள், இனி, புதன் கிழமைகளில், கதர் ஆடை அணிந்து தான், அலுவலகத்துக்கு வர வேண்டும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான, கூட்டணி ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின், உம்மன் சாண்டி, முதல்வராக உள்ளார்.இந்நிலையில், கேரள மாநில அரசு, நேற்று வெளியிட்ட அறிக்கை:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கான முக்கிய குறிப்புகள்

* ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான  கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் நடைபெறும் கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான  கலந்தாய்வு அன்று பிற்பகல் தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலையில் இலவச சிற்றுண்டி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை வேளைகளில் இலவச சிற்றுண்டி வழங்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தின் புதிய தலைமை செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்

ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக அரசின் புதிய தலைமை செயலராக நியமிக்கபடுகிறார். தற்பொழுதைய தலைமை செயலரான தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெறுவதை அடுத்து ஷீலா பாலகிருஷனன் நியமிக்கப்படுகிறார்.

ஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது.

சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை

சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், நேற்று முதற்கட்ட ஆலோசனையை, போக்குவரத்து துறை நடத்தியது.

அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், நீண்ட விடுப்பில் செல்லும் போது, அந்தப் பணியிடங்களில் மாற்று ஆசிரியர்களை நியமிக்காமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.

சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில் ஜனவரி 3,4 தேதிகளில் வி.ஏ.ஓ. கலந்தாய்வு

சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. கலந்தாய்வுக்கு வருபவர்கள், உரிய அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என, தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அடுத்த கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்கள் ஆன்-லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் அமுல்படுத்த முடிவு.

ஆன்-லைன் வழியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம், அடுத்த ஆண்டில் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால், உயர்கல்வி நிறுவனங்கள், தங்களிடம் சேரும் மாணவர்களின் சான்றிதழ்களை, உடனுக்குடன் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ்கள் ஊடுருவலையும், எளிதில் தடுத்து நிறுத்த முடியும்.

தகுதியானவர்கள் மட்டுமே முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் களாக நியமனம்

பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 21 ஆயிரம் பேரில் வெறும் 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறாதது கண்டறியப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள்

தகுதித் தேர்வில் தேர்ச்சியின்றி நியமிக்கப்பட்ட ஆசிரியர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்: கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு 5.3 லட்சம் இலவச லேப்-டாப் விநியோகம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த 5.3 லட்சம் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் விநியோகிக்கப்பட்டு விட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நடப்பு கல்வியாண்டில் முன்னதாகவே பி.எட்., தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு

இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

Wednesday, December 26, 2012

முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி: விரைவில் புதிய பட்டியல்? Dinamalar News

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடல்தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். மேலும், சரியான கல்வித்தகுதி

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் : ஜனவரி 2013-ல் வருகிறது அறிவிப்பு

பள்ளி கல்வித்துறையில், இயக்குனர் நிலையில், ஏற்கனவே ஒரு பணியிடம் காலியாக உள்ள நிலையில், இம்மாத இறுதியில், மேலும் ஒரு பணியிடம் காலியாகிறது. இதனால், புத்தாண்டு பிறந்ததும், அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம்

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை சிடி வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான, பாடத்தினை இ-கன்டன்ட் என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

3ம் பருவ பாடப்புத்தகங்கள் விடுமுறைக்கு பின் வழங்கப்படும்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் பற்றாக்குறை: பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகள் மூடல்

தொழில் கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tuesday, December 25, 2012

8ம் வகுப்பு தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரியில் சான்றிதழ்

பள்ளியில் முறையாக கல்வி கற்காமல் நேரடியாக 8ம் வகுப்பு எழுதுவோருக்கு "இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம்" பொருந்தாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி முடித்து, 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஆசிரியர் பணிமுடித்து 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு 3 நாள் வானவியல் வகுப்பு

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வானவியல் குறித்த 3 நாள் குளிர்கால வகுப்பு நடைபெற உள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் காத்திருப்பு.

முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் கோப்பு, இரு வாரங்களாக, முதல்வர் அலுவலகத்தில் காத்திருக்கிறது.

விலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க புதிய அணுகுமுறை

கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிகளை மாணவர்கள் விற்று வருவதைத் தடுக்க, உயர்கல்வித்துறை, புது திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதையடுத்து, மடிக்கணினிகளை, அன்றாடம் பயன்படுத்தும் திட்டம், கல்வித்துறையில் விரைவில் அமலாகும் எனத் தெரிகிறது.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்... தொலைக் காட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில், வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது" என, தொலைக்காட்சி சேனல்களுக்கு, ஒளிபரப்பு குறை தீர்வு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Sunday, December 23, 2012

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - எவ்வாறு வெல்லலாம்?

மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், 2013ம் கல்வியாண்டு முதல் சேர விரும்பும் மாணவர்கள், தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. இத்தேர்வு, 2013, மே 5ம் தேதி நடத்தப்படவுள்ளது.

ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சச்சின் அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்  சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய பி.சி.சி.ஐ., உறுதி செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இரட்டைபட்டம் (Double Degree) காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 13 ஆசிரியர்களுக்கு பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை. இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது , "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டம் தயார்

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது. கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் களிடம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில், தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வை உடனடியாக ரத்து செய்ய, டி.ஆர்.பி.,யும், அவர்களை வேலையில் இருந்து, டிஸ்மிஸ் செய்வதற்கு, கல்வித்துறையும் முடிவு செய்துள்ளன.

தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விபரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்ய வேண்டும், என்ற தேர்வுத்துறை இயக்குனரின் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர் மற்றும் முழு மதிப்பீட்டு (சி.சி.இ) முறையில் பாடமெடுக்க புதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை

தொடர், முழு மதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்" என, புதியதாக பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

பள்ளிக் கல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர் பணியிடம் விரைவில் நியமனம்

பள்ளி கல்வித்துறையில், 1,000 இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120 தட்டச்சர்கள், விரைவில், ஆன்-லைன் கலந்தாய்வு வழியில், நியமிக்கப்பட உள்ளனர்.

விலையில்லா லேப்-டாப் விற்பவர், வாங்குபவர் மீது கடுமையான நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

தமிழக அரசால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா லேப்-டாப்கள் மறைமுகமாக விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை விற்கும் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பணத்தில் விலை உயர்ந்த செல்போன்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர் என்கிற தகவல் கல்வி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Saturday, December 22, 2012

உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !

பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)  நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க டிச.,31ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது

உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்குவது தொடர்பான புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வெழுதுவோர் விபரங்களை இணையத்தில் பதிய உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி, தங்களைப் பற்றிய விவரங்களை, பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்.

10ம் வகுப்பு தேர்வு - ஆங்கிலம் முதல் தாளில் குழப்பம்

பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்விற்கான, ஆங்கிலம் முதல் தாளில் இரண்டு கேள்விகள் இடம் பெறாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு, தற்போது நடந்து வருகிறது. நேற்று நடந்த, ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், 42 மற்றும் 45 எண்களுக்கான

கட்டாயக் கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது!

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது" என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, எந்த மாணவரையும் தோல்வி அடைய செய்யக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. 8ம் வகுப்பு தேர்வு, நேரடியாக, தனி தேர்வாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

ஒரு பள்ளி , ஓர் ஆசிரியர் , 120 மாணவர்கள் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சேந்தமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிவு.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. நாளை முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி

திட்டமிட்ட செயல்பாடு - அதிக மதிப்பெண்கள்

ஒரு செயல் எவ்வாறு அமைகிறதோ, அதை வைத்தே இறுதி வெற்றி தீர்மானிக்கப்படும். எப்படி படிக்கிறோமோ, அதை வைத்தே நமது மதிப்பெண்கள் இறுதி செய்யப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெற, எப்படி சிறப்பாக படிக்கலாம் என்பதை இக்கட்டுரை அலசுகிறது.

அடுத்தாண்டு முதல் மருத்துவ படிப்புக்கு ஒரே மாதிரியான கட்டணம்

தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரி நிர்வாகம் 2013-14 கல்வியாண்டு முதல் தகுதி மற்றும் மேலாண்மை ஒதுக்கீடு இடங்களுக்கு ஒரே மாதிரியான கல்வி கட்டணம் வசூலிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

டிசம்பர் 27-ல் சென்னையில் பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் மாநிலந் தழுவிய பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகிற டிச.27-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடைபெறும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கி.ரத்தினக்குமார் தெரிவித்தார்.

பி.எப்.,க்கு வட்டி எவ்வளவு?ஜனவரி 15ல் முடிவாகிறது


தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு, எத்தனை சதவீத வட்டி என்பது, வரும் 15ம் தேதி அறிவிக்கப்படுகிறது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்துள்ளோருக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படும். இந்த நிதியை,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிர்வகித்து வருகிறது
.

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7,000 பணியிடங்கள் காலி

மாநிலம் முழுவதும் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 7,000 பணியிடங்கள், காலியாக உள்ளன. இந்த விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, உத்தரவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.

அட்சயப் பாத்திரம் திட்டம்: ஜனவரியில் துவங்குமா?

அரசு அறிவித்துள்ள "அட்சய பாத்திரம்" திட்டம் குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் முறையான அறிவிப்பு இல்லாததால், இதை செயல்படுத்த தலைமை ஆசிரியர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

டிசம்பர் 28-30ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 11வது உலகத் தமிழ் இணைய மாநாடு!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 11-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வருகிற டிச.28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகள் புள்ளி விவரம்: தலைமை ஆசிரியர்கள் கைவிரிப்பு

அரசு பள்ளிகளின் புள்ளி விவரங்களை, தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் சேகரிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் முறைக்காக சேகரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நம்பிக்கைத் தான் வாழ்க்கை, நாளை நமதே!!!


நாகரிகத்தின் உச்சத்தில் திகழ்ந்த மாயன் இனத்தவர். மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்றநாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரி சீருடை

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தொடக்கக் கல்வி பாடத் திட்டத்தில், ஜாதியற்ற சமூகம் தொடர்பான பாடமும், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், சைபர் கிரைம் குறித்த பாடமும் சேர்க்கப்படும் என்றார்.

பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு

பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள்

கார்ட்டூன் வடிவத்தில் பாடங்கள்: மாணவர்களை கவர புதிய முயற்சி

கணிதம், அறிவியல் என்றால் அலறி ஓடும் மாணவர்களுக்கு அதன் அடிப்படை அறிவை எளிமையாகவும், உறுதியாகவும் கற்றுத்தர கார்டூன் வடிவில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக கோவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பள்ளிகல்வித்துறையில் காலியாக உள்ள 75 டி.இ.ஓ.,கள் பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்படும் : இயக்குனர் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், நேர்மையான முறையில் நிரப்பப்படும்' என, பள்ளி கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். இத்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிகள் முக்கியமானது. முப்பருவ கல்வி முறையில், முழுமையான தொடர்

புதிதாக நியமனம் செய்யப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர் களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி

புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 18 ஆயிரம் பேர், முதுகலை தேர்வில், 2,308 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, கடந்த, 13ம் தேதி,

Wednesday, December 19, 2012

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் இழப்பு : தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட முடிவு

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ரூ.7,838 இழப்பு ஏற்படுகிறது. அது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் ஜன.,5ல் போராட்டம் நடத்தப்பட உள்ளது,'' என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் தமிழ்செல்வன் கூறினார். அவர் கூறியதாவது:

1.27 லட்சம் காலியாகும் அரசு பணியிடங்கள் - முறையான ஊழியர் நியமனம் நடக்குமா?

தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.

பங்களிப்பு ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களை ஏமாற்றும் திட்டமே! அச்சுதானந்தன் விமர்சனம்

இத்திட்டம் புதிதாக நியமனமாகும் ஊழியர்களுக்கு மட்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் தற்போதைய ஊழியர்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. அதற்கான சட்டப்பிரிவுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டமுன்வரைவில் உள்ளன.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் அரசு பெரும் நிறுவனங்களின் தீய எண்ணங்களுக்கு தீனி போட விழைகிறது. இத்திட்டம் அரசு ஊழியர்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதனைத் தடுத்து நிறுத்த ஒரு வலிமையான போராட்டம் தேவைப்படுகிறது என்று கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.

அலறல்! மாணவர்களை கண்டு பள்ளி ஆசிரியர்கள்... 9ம் வகுப்பில் "சரக்கு' அடிக்கும் கொடுமை

வகுப்புக்கு நோட்டு, புத்தகம், எடுத்து வராமல், பாடம் நடத்தும்போது, குலுக்கல் சீட்டு விளையாடுவதும், மொபைல் ஃபோனில் படம் காட்டியும், மாணவர்கள் அட்டகாசம் செய்கின்றனர்' என, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில், ஆசிரியர்கள் குமுறினர்.

டி.ஆர்.பி., அலுவலகத்தில் முதுகலை ஆசிரியர்கள் அலைக்கழிப்பு

முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு வந்து முறையிட்டனர். தினமும், 100க்கும் மேற்பட்டோர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுவதால், எப்போதும் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.

கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்

வேளாண்மை, கல்வி, சுகாதாரத்தில் அக்கறை செலுத்தி, வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி, நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரையாண்டு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட காலாண்டுத் தேர்வைப் போலவே, அரையாண்டு தேர்வும் பொதுத் தேர்வை போல் நடத்தப்படுகிறது.

பி.எட்., ஆசிரியர் நியமனம்: 2வது இடத்திற்கு வந்த தமிழ்

பி.எட்., ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு 2ம் இடம் ஒதுக்கியதால், தமிழ் பாட ஆசிரியர்கள் நியமனம் அதிகரித்துள்ளது. இந்த புதிய உத்தரவால், தமிழ் பாடங்களுக்கு காலியாக உள்ள 2,080 ஆசிரியர் பணியிடங்களில், 1,550 தமிழ் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tuesday, December 18, 2012

ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்குவதோடு, மத்திய அரசைப் போல குறைந்தபட்ச போனசாக ரூ.3500-ஐ மாநில அரசும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்மாநிலம்முழுவதும் திங்கள்கிழமையன்றுஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்துவித Non- Teaching Staff காலிப்பணியிட விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆய்வு செய்ய உள்ளதால் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்துவித Non- Teaching Staff காலிப்பணியிட விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

வேலை கிடைக்காத முதுகலை ஆசிரியர்கள் முற்றுகை : டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஓயவில்லை பரபரப்பு

முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள், நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தினமும், 100க்கும் மேற்பட்டோர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுவதால், எப்போதும் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. டி.இ.டி., தேர்வு, அதைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் 29-ல் உண்ணாவிரதம்

இருபது அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் வரும் 29-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

+2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒரு வாரத்திற்குள் தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும். கடந்த ஆண்டு 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை தேர்வுகள் நடந்தது. இந்தாண்டு பொதுத் தேர்வுகள் தொடங்குவது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி கூறியது, அரசு பொதுத் தேர்வுகளுக்கான

1200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு

முதுகலை ஆசிரியர் பணிக்கு காலியாக உள்ள 1200 இடங்கள் அடுத்த ஆண்டிற்குள்  நிரப்பப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஆர்.பி.,க்கு கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே ஜனவரியில் புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - dinamalar

இருபது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி, சென்னையில் உண்ணாவிதரப்போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. ஊதியக்குழு முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மாற்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - RIGHT TO INFORMATION ACT

1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு காலங்களில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்க கூடாது

தேர்வு காலங்களில் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆசிரியர் மாநாட்டில் ஒரு நெகிழ்வான செய்தி

சென்னையில் உள்ள ஜ டீ சி கிரண்ட் ஓட்டலில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த திருமதி . வலண்ரினா இளங்கோவன் இலங்கையின் கற்பித்தல் கற்றல் முதலியவற்றை விளக்கினார். பின் எங்கள் பிள்ளைகள் படிக்க தயார் ஆனால் அதற்குறிய புத்தகங்களையும் இலக்கிய

2013-14ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ஆம் வகுப்பு வரை 9.5 கோடி பாடப்புத்தகம் தயாரிப்பு பணி மும்முரம்

அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்காக, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை, பொங்கலுக்கு முன்னதாக துவக்கி, ஏப்ரலில் முடிக்க தமிழ்நாடு பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் நியமன கலந்தாய்வு விரைவில் துவங்கும்

வி.ஏ.ஓ., பணி நியமன கலந்தாய்வு, இம்மாத இறுதிக்குள் நடக்கும்,' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது புகார்: குழந்தைகள் நலக்குழு விசாரணை

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளிடம், மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் விசாரணை நடத்தினர்.

Monday, December 17, 2012

தகுதி தேர்வில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

அக்டோபர் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 2 மாதமும் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரு பள்ளியில் 90 சதவீதம் வெற்றி என்றால், அங்கு, 10 சதவீத தோல்விக்கு, தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும் - RMSA இணை இயக்குனர் நரேஷ்

இராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசியதாவது:  ஒவ்வொரு பள்ளியிலும், பத்தாம் வகுப்பில் மட்டும், மாணவர்களை தேர்ச்சிக்கு தயார்படுத்தினால் சாதிக்க முடியாது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

அக்டோபர் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 2 மாதமும் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுகளாகத் திறக்கப்படாத பள்ளிக் கட்டடம்

ரிஷிவந்தியம் அருகே கட்டி திறக்கப்படாமல் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக் கட்டடம் வீணாகி வருகிறது.  ரிஷிவந்தியம் ஒன்றியம், நூரோலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 153 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 2 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

தொப்பையை குறைக்க சில முக்கிய குறிப்புகள் !

 பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.

பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் தனியார் அமைப்புகளுக்கு தடை

பள்ளிகளில் மாணவர்களுக்கு, "டெங்கு' கசாயம், தடுப்பு மாத்திரை வழங்க, தனியார் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. "டெங்கு' காய்ச்சலால், தமிழகத்தில் ஏராளமானோர் இறந்துள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் "டெங்கு' பாதித்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

Sunday, December 16, 2012

மார்ச் 1–ந் தேதி முதல் மார்ச் 8–ந் தேதிக்குள் பிளஸ்–2 தேர்வை தொடங்கவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஏப்ரல் 16–ந் தேதிக்குள் முடிக்கவும் அரசு தேர்வுகள் துறை முடிவு

இந்த வருடம் பிளஸ்–2 தேர்வு எப்போது தொடங்கும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: அரசு பொதுத்தேர்வுகளான பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நல்ல முறையில் நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும்

அரசு கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில ஒப்பந்தம்

தமிழக அரசு கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில், கல்வி கற்க, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆசிரியருக்கு 23 ஆண்டுகளாக பணி வரன்முறை இழுத்தடிப்பு : உயர்நீதிமன்றம் கண்டனம்

செங்கல்பட்டில் உள்ள, குண்டூர் தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக, லலிதா என்பவர், 1987ம் ஆண்டு, நவம்பரில் சேர்ந்தார். ஒப்பந்த அடிப்படையில், பணி வழங்கப்பட்டது. இவர், தமிழ் பண்டிட். இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்ததால், தமிழ் பண்டிட்டை நியமிக்க, 1986ம் ஆண்டு, கல்வித் துறை உத்தரவிட்டது.

2010 - 11ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 284 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி

பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2010-11 கல்வியாண்டு தரம் உயர்த்தப்பட்ட 284 நடுநிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாக பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக ஆரம்ப பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும், முதலில் பணி நியமன உத்தரவுகள் வழங்குவதாக, திட்டமிடப்பட்டிருந்தது. பின், திடீரென, முதுகலை ஆசிரியர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், 2,895

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி

தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணி கிடைத்துள்ளதால், அவர்கள் ஏற்கனவே வேலைபார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெரியார் பல்கலை தொலைநிலை கல்வியில் முறைகேடு

பெரியார் பல்கலையில், 33 தொலைநிலைக் கல்வி மையங்கள், அனுமதி கடிதம் பெறாமலேயே, மாணவர் சேர்க்கை நடத்தியுள்ள, பகீர் முறைகேடு வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவியின் உயிரை பறித்த மேஜிக்

தேனி மாவட்டம், போடி அருகே, பள்ளி மாணவி ஒருவர், மேஜிக் செய்வதாக கூறி, தண்ணீர் தொட்டியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில், தீயில் கருகி பலியானார்.

அரசு பள்ளி மாணவர்கள் வாய்க்காலில் தண்ணீர் எடுக்கும் அவலம்

ஈரோடு மாவட்டம் கவுண்டிச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளி வேலை நேரத்தில், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் எடுத்த போது தவறி விழுந்தனர். பல இடங்களில் இதுபோன்று மாணவ, மாணவியரை உயிரை பணயம் வைக்கும் பணிகளுக்குக்கூட பயன்படுத்துவது, தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தொடர்கிறது.

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தகவல்கள் சேகரிப்பு

கல்வி மேலாண்மை தகவல் முறையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் மாணவர்கள் குறித்த தகவல் சேகரிக்கும் பணியில், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பொது தேர்வுக்கு தனியாக தகவல் சேகரிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.

Saturday, December 15, 2012

பட்டியல் தயாரித்ததில் குழப்பம் உபரியாக வெளியேற்றப் பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்க வேண்டும்

பள்ளிகளில் உபரி என்று கருதி வெளியேற்றப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்க வேண்டும். உபரி பட்டியல் தயாரிப்பதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கூறியுள்ளார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஜெயசந்திரன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்லாம் ஸ்கூல் first , district first னு வர்றப்போ , நம்ம வீட்டுப் பசங்க கொஞ்சம் கம்மியா மதிப்பெண் எடுத்தா மனசு கஷ்டமாத்தான் இருக்கும். ஆரம்பத்திலே இருந்தே , உங்க குழந்தைங்க , நல்ல புத்திசாலியா வர, சில எளிய டிப்ஸ் இங்கே கொடுக்கிறேன். அக்கறையும், ஆர்வமும் இருந்தா எதிலேயும் ஜெயிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்க..

பணி நியமன ஆணை பெற சென்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி!!

பல்வேறு தடைகளை தாண்டி சென்ற செவ்வாய்கிழமை அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இறுதி தேர்வு பட்டியல் வெளியிட்டது. கலந்தாய்வு நடத்த முடியாத சூழ்நிலையில் முதல்வர் விழாவில் தற்காலிக நியமன ஆணை பெற்று சனி அல்லது ஞாயிறு கலந்தாய்வு நடத்தப்பட்டு 17.12.2012 அன்று பிற ஆசிரியர்களுடன் பணியில்

பணி நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களையும் 17.12.2012 அன்றே பணியில் சேர அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

13.12.12 அன்று பணி நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களையும் 17.12.2012 திங்கட்கிழமை அன்றே பணியில் சேர அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. புதிதாக பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

பணி நியமன உத்தரவு வழங்கிய பின் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு, குளறுபடிகளை சரிசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

எப்போதும் இல்லாத வகையில், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில், அரசு வட்டாரத்தில் இருந்து, தொடர் நெருக்கடி வந்ததால், முழு திருப்தியில்லாமல், அரைகுறை மனதுடன், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.

அரசு பள்ளிகள் பொது தேர்வில் சாதிக்க... கல்வித்துறை அறிவுரை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார்.

மாணவர்கள் வீட்டில் நூலகம் அமைத்து படிக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்

ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் உதவியுடன், ஒரு சிறிய நூலகம் அமைத்து, தினமும் 30 நிமிடமாவது புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்," என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு: அண்ணாமலை பல்கலை வெறிச்சோடி காணப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் விடுப்பு எடுத்து, சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால், பல்கலைக்கழகம் வெறிச்சொடி காணப்பட்டது.

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுங்கள்: ஆசிரியர்களுக்கு முதல்வர் அறிவுரை

ஏழ்மையும், கல்வியறிவின்மையும் தமிழகத்தை விட்டு முற்றிலும் அகலும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசிரியர் பணிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.

அகஇ - நாளை (15.12.2012) நடைபெற இருந்த தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி ஒத்திவைப்பு.

நாளை நடைபெற இருந்த தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறுவளமையப் பயிற்சிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்தாளர்களுக்கான பயிற்சிகள் இன்னும்

பள்ளிகளில் "தர மதிப்பீடு முறை' குழப்பம்: மாணவர்கள் தவிப்பு!

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள "தர மதிப்பீடு முறை'யில் (கிரேடு சிஸ்டம்) நிலவும் குழப்பத்தால், தங்கள் திறனை மேம்படுத்த முடியாமல் மாணவர்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய முடியாமல் பெற்றோரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தற்காலிக அட்டவணை தயார்: 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில், தேர்வை துவக்கும் வகையில், தற்காலிக தேர்வு அட்டவணையை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு, தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.

Thursday, December 13, 2012

ஆசிரியர் தேர்வில் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக் கோரிய வழக்கில், ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மாணவர்களை பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் வேண்டாம்

கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடைநின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று கேட்க கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டுகளில் 10 வகை தேர்வுகளை நடத்தி 28 ஆயிரம் பேர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம்

ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி, 28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பெருமிதம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு: மார்ச் 1ம் தேதி துவங்க வாய்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி மூன்றாம் வாரம் வரை நடைபெறும். 2013ம் ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு, இப்போதே தேர்வுத்துறை அதிகாரிகள், இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பேருந்து படிக்கட்டில் தொங்கினால் பள்ளியில் இருந்து நீக்கலாம்

பேருந்து படிக்கட்டுகளில், மாணவர்கள் பயணித்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுவே, அடுத்தடுத்து நீடித்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த மாணவர்களை, பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் சான்றிதழ் இன்றி தவிப்பு

தமிழகம் முழுவதும், 8ம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் வெளியாகி, மூன்று மாதங்களாகியும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது, தேர்வு எழுதியவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, December 12, 2012

அடுத்த வருடம் முதல் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து: மத்திய மந்திரி கபில் சிபல் உறுதி

இந்தியாவிலுள்ள மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் அடுத்த வருடம் முதல் ரோமிங் கட்டணம் கட்ட தேவையில்லை என்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி கபில் சிபல் என்று கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நந்தனத்தில் நாளை 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: தமிழக முதல்வர் வழங்குகிறார்

கல்வித்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் 18,382 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு

18382 ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 14-12-2012 வெள்ளிக்கிழமையே பணியிடங்களில் பணியமர உத்தரவு.

புதிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக பணியிடங்களை பெற்ற 18000 ஆசிரியர்களும் தங்கள் பணிநியமன ஆணைகளை வரும் 13ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் விழாவில் பெற்றுக்கொண்டு 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையே தங்கள் பணியிடங்களில் பணிகளில் அமர உத்தரவிடப்பட்டுள்ளது.

7-வது சம்பள கமிஷன், 50 சதவீதம் அகவிலைபடியை சம்பளத்துடன் இணைக்க, புதிய பென்சன் திட்டத்தை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் இன்று மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 7-வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும். 50 சதவீதம் அகவிலைபடியை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வருமானவரி விலக்கு உச்சவரம்பை 5

6,500 இடைநிலை ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணி

ஒரே நாளில், 9,664 இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாநிலம் முழுவதும், நேற்று பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே இடங்கள் கிடைத்தன.

2308 முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை சென்னையில் நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் விழாவில் ஆணை வழங்க தமிழக அரசு உத்தரவு

தேர்வு பெற்றுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மற்றும் அதன் நகல், 2 புகைப்பட நகலுடன் அந்தந்த CEO அலுவலகத்தை இன்று காலை 10 மணிக்கு அணுக வேண்டும், தேர்வு செய்வதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு வேறொரு தேதியில் நடத்தப்படும் என உத்தரவு.
ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஒருவழியாக, நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஒதுக்கப்பட்ட 2,895 பணியிடங்களில், 2,308 பணியிடங்களுக்கான பட்டியல் மட்டும், வெளியாகி உள்ளது.

வெற்றி பெற்றும் தகுதி இல்லை: ஆசிரியர் தற்கொலை முயற்சி

டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்றும், வேலைவாய்ப்புக்கான தகுதி இல்லாததால், மனமுடைந்த பட்டதாரி ஆசிரியர், வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார்.

Tuesday, December 11, 2012

Direct Recruitment of PostGraduate Assistants for the year 2011 - 12 - After Certificate Verification Individual Query

TO VIEW TRB - PG RESULTS CLICK HERE...

தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தயார்நிலையில் இருக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். உயர்நீதிமன்ற இடைகால தீர்ப்பின் படி தாவரவியல் (BOTANY) தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது. நாளை முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பணிநாடுனர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது என்றும் மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம் சம்பந்தப்பட்ட  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒரு சில மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

1,743 பேரின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கேள்விக்குறியா?

தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743 ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153) வெளியிட்டது. இதில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

பள்ளி கட்டடத்தை பாதுகாப்பு படையினர் பயன்படுத்த அனுமதியில்லை: அரசு அதிரடி

நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில், நக்சலைட்டுகளுக்கு எதிராக, அதிரடி வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர், பள்ளிக்கூடங்களை பயன்படுத்த கூடாது; இது தொடர்பாக, மத்திய அரசு,

அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தாவல் சோகம்! தவிப்புக்கு உள்ளாகும் தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்ட, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளி ஆசிரியர்களாகி உள்ளனர். இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் முக்கிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரையாண்டு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2ம் நாள் கலந்தாய்வு மந்தம்

இரண்டாவது நாளாக, நேற்று நடந்த கலந்தாய்வில், 2,035 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்று, வெளி மாவட்டங்களில் உள்ள, காலி பணியிடங்களை தேர்வு செய்தனர். வெளி மாவட்டத்தில் பணி என்பதால் கலந்தாய்வு விறுவிறுப்பில்லாமல், சற்று மந்தமாக நடந்தது.

20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி ஒருநாள் பட்டினிப் போராட்டம் - தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் டிசம்பர் 29-ம் தேதி ஒருநாள் பட்டினிப் போராட்டம் நடத்த உள்ளதாக, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிறுவனர் அப்துல் மஜீத் கூறினார்.

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 25 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 18,291 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் தயார்நிலையில் இருப்பதாகவும், முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்து முடிந்து உயர்நீதிமன்ற வழக்கால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி முடிவுகள் தயார் செய்யப்பட்டு

பள்ளிக்கல்வித்துறை (DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

13.12.2012 அன்று சென்னையில் முதல்வர் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெறும் அனைத்து விதமான (IED,SMC,SABL) பயிற்சிகள் ரத்து செய்யப்படும் என இயக்கக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திறந்தவெளியில் பாடம் கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்

உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தி, 15 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இன்னமும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்படாததால், ஓட்டேரி அரசு பள்ளி மாணவர்கள் திறந்த வெளியில் பாடங்களை பயின்று வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆன்லைன் முறையிலான பணி நியமன கலந்தாய்வு, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஊதியம், ஊதிய விகிதம் மற்றும் படிகள்

இடைநிலை ஆசிரியர்: ஊதியம் மற்றும் ஊதிய விகிதம்:
Pay Band 1:5200--20200+2800+750
Pay(அடிப்படை ஊதியம்)- 5200-20200=5200
Grade Pay (தர ஊதியம்) - 2800
Personnel Pay (தனி ஊதியம்) -750
01.12.2012 ன் படி மாத ஊதியம் :அடிப்படை ஊதியம் (Basic Pay) + Grade Pay (தர ஊதியம்) + Personnel Pay (தனி ஊதியம்)- 5200+2800+750 = 8750 
Dearness Allowance: DA (அகவிலைப்படி) 72% : 8750 x 72 = 6300
மருத்துவப்படி (Medical Allowance: MA) = 100
Total: ரூ.15150
PAY -          5200
GR.PAY -          2800   

P.PAY    -            750  
DA(72%) -         6300
HRA        -
MA        -           100
                        ----------------------
TOTAL                15150
                        ----------------------
குறிப்பு: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance: HRA) : Rs.180/300/440/600/800(வீட்டு வாடகைப்படி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி ஏற்ப HRA மாறுபடும். மேலும் பெரு நகரங்களில்(மாநகராட்சி) பணி நியமனம் பெற்றவர்களுக்கு கூடுதலாக CCA கிடைக்கும்.

பட்டதாரி ஆசிரியர் : ஊதியம் மற்றும் ஊதிய விகிதம்:

6,418 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சொந்த ஊரில் பணி வாய்ப்பு

டி.இ.டி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், மாநிலம் முழுவதும் நேற்று சுறுசுறுப்பாக நடந்தது. 8,718 பேரில், 6,418 பேருக்கு, அதிர்ஷ்டம் அடித்தது. இவர்கள் அனைவருக்கும், அவரவர் சொந்த ஊர்களிலேயே வேலை கிடைத்தன.

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற 18,382 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல்கட்டமாக, பட்டதாரி ஆசிரியர், சொந்த மாவட்டத்தில், பணி பெறுவதற்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில் நடந்தது. சென்னை மாவட்டத்தில், எந்த பாடத்திலும், காலி பணியிடங்கள் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

Sunday, December 9, 2012

நாளை நடைபெறும் வேறு மாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வேண்டுவோர் எந்த மாவட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுரைகள்

நாளை நடைபெறும் வேறு மாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வேண்டுவோர் இன்று கலந்துகொண்ட  மாவட்டத்திலே பங்கு கொள்ள வேண்டும் என்றும், இன்றைய கலந்தாய்வு முடிந்தபின் புதிய காலிப்பணியிட பட்டியல் மற்றும் புதிய RANK LIST தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நாளை பிற மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

சென்னையில் டிசம்பர் 13-ந் முதல்வர் பங்கு பெறும் விழா நேரம் மாற்றம்

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்கள் ஆன்லைன் கலந்தாய்வு எந்தெந்த மாவடடத்தில் கலந்துகொள்வது குறித்த விளக்கம்

இடைநிலை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஆசிரியர் பட்டயப் பயிற்சி சான்றிதழ் எந்த மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த மாவட்டத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். தேர்விற்கு தங்கள் அளித்த வீட்டு முகவரி (COMMUNICATION ADDRESS) உள்ள மாவட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.    

பட்டதாரி ஆசிரியர்கள் ஆன்லைன் கலந்தாய்வு எந்தெந்த மாவடடத்தில் கலந்துகொள்வது குறித்த விளக்கம்

பட்டதாரி ஆசிரியர்கள் பொறுத்தவரை தேர்விற்கு தங்கள் அளித்த வீட்டு முகவரியே (COMMUNICATION ADDRESS) உங்களுடைய சொந்த மாவட்டமாக கருதப்படும், அதாவது சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்ட (CERTIFICATE VERIFICATION) மாவட்டத்தில் தான் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும். தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் உங்கள் வேலைவாய்ப்பக பதிவு மாவட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.    

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் இடங்கள் விவரம்

சென்னை - எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு
கோவை - பாரதி மெட்ரிக் மே.நி.பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோவை
கடலூர் - சி.இ.ஓ., அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
தர்மபுரி - சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
திண்டுக்கல் - அவர்லேடி மே.நி.பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்

வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்கு அழைப்பு

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று, பணி நியமன கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கினர். இதை சற்றும் எதிர்பாராமல், தேர்வு பெற்றோர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.