Pages

Tuesday, December 25, 2012

ஆசிரியர் பயிற்சி முடித்து, 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஆசிரியர் பணிமுடித்து 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பூசைதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

முதல்–அமைச்சருக்கு நன்றி

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சுமார் 21 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, நேரடி பார்வையின் மூலம் பணி நியமன ஆணையை வழங்கிய தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இன்று பல ஆயிரம் ஆசிரியர்கள் பி.எட், முடித்து விட்டு தனியார் பள்ளிகளில் 40 முதல் 45 வயது கடந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு வயதின் அடிப்படையில் கருணை காட்ட வேண்டும். இவர்களுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பு பதிவு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் மத்திய அரசின் விதியை பின்பற்றி எஸ்.சி., எஸ்.டி. ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்கள் சலுகை அளிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் அருந்ததியினருக்கு எஸ்.சி., எஸ்.டி. அமைப்பில் உட்பிரிவு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.

பதிவு மூப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 50 சதவீதமும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 50 சதவீதமும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். 30 வயது வரை உள்ளவர்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலமும், 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

1 comment:

  1. Sir please don't bring the policy of kalaignar, We the Tamilnadu people elected Amma with a great majority. Therefore she knows what is good and what is bad for us. Amma says, to bring perfect state with perfect education which is done only through TNTET. If you want seniority wait for Kalaignar Aatchi.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.