Pages

Saturday, December 29, 2012

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் கலந்தாய்வு - Dinamani

தமிழக முதல்வரால் 13.12.12 அன்று ஆணை வழங்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு  பள்ளிக் கல்வித்துறையால் பள்ளிகளில் நியமன ஆணை திங்கள் கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு மூலம் வழங்கப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு, கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணை, மற்றும் அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பக அட்டையுடன் நேரில் ஆஜராக வேண்டும்.மாவட்டத்திற்குள் பணி புரிய விரும்புவோருக்கு காலையிலும், வெளிமாவட்டத்தில் பணி புரிய விரும்புவோருக்கு பிற்பகலிலும் கலந்தாய்வு நடைபெறும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.