இந்த வருடம் பிளஸ்–2 தேர்வு எப்போது தொடங்கும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: அரசு பொதுத்தேர்வுகளான பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நல்ல முறையில் நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும்
இனிமேல் தான் செய்யப்படும். கடந்த வருடம் முதல் இரு தேர்வுகளிலும் சான்றிதழ்கள் மாணவர்களின் புகைப்படத்துடன் வழங்கப்படுகிறது. பள்ளிகள் மூலம் விண்ணப்பித்த மனுக்கள் அரசு தேர்வுத்துறைக்கு வந்தன. அவற்றில் உள்ள திருத்தங்கள் செய்வதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சி.டி. வடிவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்பது முடிவு செய்யப்படவில்லை.
மேலும் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளுக்கான அட்டவணை முடிவு செய்யப்படவில்லை. தற்காலிக அட்டவணை எந்த முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்படவில்லை.
பிளஸ்–2 தேர்வை மார்ச் 1–ந் தேதி முதல் மார்ச் 8–ந் தேதிக்குள் தொடங்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். பிளஸ்–2 தேர்வு முடிவதை பொருத்துதான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தொடங்கும் தேதி முடிவு செய்யப்படும். ஆனால் ஏப்ரல் 16–ந் தேதிக்குள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்தி முடிக்கலாமா என்று அரசிடம் தெரிவித்துள்ளோம். அரசின் அனுமதி பெற்று பிளஸ்–2 தேர்வு கால அட்டவணையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணையும் தயாரித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
இன்னும் ஒருவாரத்திற்குள் தேர்வுக்கான அட்டவணை வெளியிடவாய்ப்பு உள்ளது என்றும் பிளஸ்–2 தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் பேர்எழுதவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 75 ஆயிரம் பேர்களும் எழுத வாய்ப்பு உள்ளது என்று தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.