ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி, 28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.ஆர்.பி வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு, மே முதல், நடப்பு ஆண்டு டிசம்பர் வரை, 10 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, 28,414 பேர், தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
தேர்வுகளும், தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் வருமாறு:
இடைநிலை ஆசிரியர் - 9,689
சிறப்பு ஆசிரியர் - 1,555
பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள் - 13,074
கம்ப்யூட்டர் ஆசிரியர் - 192
சத்துணவு பணியாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் - 136
முதுகலை ஆசிரியர் - 3,438
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் - 34
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் - 151
பாலிடெக்னிக் கல்லூரி - உதவி பேராசிரியர் - 131
சட்ட கல்லூரி விரிவுரையாளர்கள் - 14
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.