Pages

Sunday, December 23, 2012

ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சச்சின் அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்  சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய பி.சி.சி.ஐ., உறுதி செய்துள்ளது.
உலகிலேயே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் பல சாதனைகளை புரிந்திருந்தாலும் சமீப காலமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என செய்திகள் கசிந்த வண்ணம் இருந்தன.

இந்தச் சூழலில், சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பி.சி.ச.ஐ.,க்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான அணித் தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று சச்சின் தெண்டுல்கர் ஓய்வு அறிவித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18, 426 ரன்களைக் குவித்துள்ளார்.  இவற்றில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடங்கும்.

ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டைச் சதம் அடித்த பெருமை அவரையே சேரும். 62 முறை ஆட்டநாயகன் விருதும், 15 முறை தொடர் நாயகன் விருதும் பெற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.