தேனி மாவட்டம், போடி அருகே, பள்ளி மாணவி ஒருவர், மேஜிக் செய்வதாக கூறி, தண்ணீர் தொட்டியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில், தீயில் கருகி பலியானார்.
போடி அருகே மீனாவிலக்கு பகுதியை சேர்ந்த, மச்சக்காளை மகள் கவிதா, 13. அணைக்கரைப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில், 7 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்த பின், வீட்டில் பெற்றோர் இல்லாத போது, மேஜிக் செய்வதற்காக, வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குனிந்தவாறு, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
குபீரென பற்றி எரிந்த தீயில் கவிதா பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, நேற்று பலியானார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.