Pages

Monday, December 31, 2012

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது, தனியாக பள்ளி நடத்தினால் புகார் அளிக்கலாம், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 435
பேர் தேர்வு எழுதினர். இதை மேற்பார்வையிட வந்திருந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும்போது கல்வி உதவித்தொகை மாதம் ரூ.500 வீதம் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் வழங்கப்பட உள்ளது.

இந்த உதவித் தொகையைப் பெற திருவண்ணாமலையில் 415, ஆரணியில் 435, செய்யாறில் 496 என திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1,346 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

திருவண்ணாமலை மாவட்டம், கல்வித் தரத்தில் தமிழக அளவில் 27வது இடத்தில் உள்ளது. இதனை 10 இடத்துக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி பல்வேறு வகையான ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.

நன்கு படிக்காத மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்ணாவது பெற்று தேர்ச்சி பெறும் அளவிற்கு கேள்வித்தாள்களை தயாரித்துத் தருவது, அதற்கான பதில்களை எப்படி எழுதுவது, மாணவர்களுக்கு எப்படி சொல்லித் தருவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடத்தை மாணவர்கள் வீட்டில் படிக்கிறார்களா என்று பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது, தனியாக பள்ளி நடத்துவது பெரிய தவறு. இதுபோன்ற நடவடிக்கையில் யாராவது ஈடுபட்டால் புகார் அளிக்கலாம். சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) செ.முருகேசன் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.