Pages

Saturday, December 22, 2012

ஒரு பள்ளி , ஓர் ஆசிரியர் , 120 மாணவர்கள் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சேந்தமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும்
ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என கடந்த 5 ஆண்டு காலமாக இக்கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

மேலும் பள்ளிக்கு அருகில் முள்புதர்கள் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் பள்ளிக்கு வருவதால் மாணவர்கள் அச்சப்படுவதாகவும் இதைக் கண்டித்தும், மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்படையாமல் இருக்க ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி நேற்று காலை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின்
அனைத்து வகுப்பு அறைகளையும் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் மார்கபந்து மற்றும் போலிசார் பெற்றோர்களிடம் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மீண்டும் வகுப்பு நடைபெற்றது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.