Pages

Saturday, December 22, 2012

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிவு.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடந்த அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. நாளை முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்டவையில் 1 கோடியே 32 லட்சம் மாணவ மாணவியர் படிக்கின்றனர். இவர்களில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முப்பருவ முறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி தற்போது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கின்றன(அரையாண்டுத் தேர்வு) இந்த தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வாக நடத்தப்படுகிறது. அவர்களை பொறுத்தவரை இந்த தேர்வு ஜனவரி 10ம் தேதி வரை நடக்கும். இதற்கிடையே நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை அறிவிக்கப்படுவதால் விடுமுறை முடிந்தும் இவர்கள் தேர்வு எழுத வேண்டும்.
1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் முடிவதுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை ஜனவரி 1 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 3ம் பருவம் தொடங்குகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.