20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் டிசம்பர் 29-ம் தேதி ஒருநாள் பட்டினிப் போராட்டம் நடத்த உள்ளதாக, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிறுவனர் அப்துல் மஜீத் கூறினார்.
கடலூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மெட்ரிக் பள்ளிகள் அனைத்திலும் 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அப்படி செய்ய முன்வரும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் கல்வி மானியமாகவும் நிர்வாகச் செலவை நிர்வாக மானியமாகவும் அரசே ஏற்று உதவிபெறும் பள்ளிகளை போல நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் நியமனத்துக்குப் புதிதாக கொண்டு வந்துள்ள தகுதித்தேர்வை ரத்து செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களின் ஆரம்ப ஊதிய விகிதம் ரூ.5,200 என்பதை ரூ.9,300 ஆக நடைமுறைப்படுத்த வேண்டும்.
உதவி மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் குழந்தைகள் வருகை அடிப்படையிலும், அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் பதிவு அடிப்படையிலும் பள்ளிக்குப் பள்ளிக்கு வேறுபடுத்துவதை மாற்றி அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை பதிவு அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.