சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளிடம், மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் விசாரணை நடத்தினர்.
இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் சிலர் மீது பல்வேறு புகார்கள் குழந்தைகள் நல மையத்திற்கு வந்தன. அதனடிப்படையில், பள்ளியில் நேற்று காலை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர், நன்னடத்தை அலுவலர் சிவகுமார் விசாரணை நடத்தினர்.
மாவட்ட நன்னடத்தை அலுவலர் சிவகுமார் கூறுகையில், "பள்ளியிலுள்ள சில ஆசிரியர்கள், மாணவர்களை தாக்குவதாகவும், ஜாதிய ரீதியாக நடத்துவதாகவும், மாணவிகளிடம் சில்மிஷம் செய்வதாகவும் புகார்கள் வந்ததால், விசாரணை செய்தோம்.
மாணவர்கள் மத்தியில் ஜாதிய உணர்வு அதிகம் உள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர், பள்ளி வளாகத்தில் தவறாக நடப்பது தெரிய வந்தது. விசாரணை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிக்கை அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.