அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எம்.பில் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
பயனற்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை காரணம் காட்டி, ஊதியம் வழங்க மறுப்பதை கைவிட வேண்டும். மேலும் அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண் டும்.
அரையாண்டு தேர்வு களை கடந்த ஆண்டுகளை போல் நடத்த வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கவுன்சலிங்கில் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதாக கூறி, சில ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் தற்போது அதே பணியிடங்களில் மீண்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாவட்ட இணை செயலாளர் லூயி ஜான்பிரிட்டோ, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கலைத்தங்கம், கண்ணன், ரிஷிகேசவன், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.