Pages

Thursday, December 27, 2012

நடப்பு கல்வியாண்டில் முன்னதாகவே பி.எட்., தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு

இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.
கட்டாய கல்விச் சட்டப்படி, ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இத்தேர்வில், பி.எட்., தேர்வு முடிவிற்காக காத்திருப்போரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது.

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற போதும், பி.எட்., படிப்பிற்கான சான்றுகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், பிரச்னை உருவானது. இதை போக்குவதற்கு, அரசு எடுத்த முயற்சியின் முதற்கட்டமாக, இந்தாண்டு பி.எட்., படிப்போருக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் கல்வியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "வரும் ஏப்ரலில் தேர்வுகளை நடத்தி, ஜூன் முதல் வாரத்திற்குள் சான்றுகளை வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது. செய்முறைத் தேர்வுகளை, பிப்ரவரி 18ல் துவக்கும் வகையில் ஆயத்தப்படுத்த அறிவுறுத்தல் வந்துள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட, இரு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன,&'&' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.