தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க டிச.,31ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கி அல்லது தபால் வழியாக கட்டணம் செலுத்துபவர்கள் ஜனவரி 3ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது. இதற்கு முன் இணையதளத்தில் விண்ணப்பிக்க 24, கட்டணம் செலுத்த 27ம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் ஏராளமாக வந்து குவிந்த வண்ணம் உள்ளதால் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.