Pages

Tuesday, December 18, 2012

ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்குவதோடு, மத்திய அரசைப் போல குறைந்தபட்ச போனசாக ரூ.3500-ஐ மாநில அரசும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்மாநிலம்முழுவதும் திங்கள்கிழமையன்றுஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன், செயலாளர் சி.கோவிந்தசாமி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம்.சி.சக்திவேல், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கருப்பையா, சில அளவைத்துறை சார்பில் சங்கர் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஊதியக்குழு, ஒரு நபர் குழு ஆகியவற்றின் குறைபாடுகளைக் களையக்கோரி அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குறை தீர்க்கும் குழு அறிக்கையினை உடனடியாகக் வெளியிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  தொகுப்பூதிய, மதிப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத் தலைவர் தி.நடராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.