பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் அரசு பெரும் நிறுவனங்களின் தீய எண்ணங்களுக்கு தீனி போட விழைகிறது. இத்திட்டம் அரசு ஊழியர்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதனைத் தடுத்து நிறுத்த ஒரு வலிமையான போராட்டம் தேவைப்படுகிறது என்று கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.
அரசு சேவை அமைப்புகளின் கூட்டுக் குழுவின் 38வது மாநில மாநாட்டின் ஓர் அங்கமாக பங்களிப்பு ஓய்வூதியமும் - அரசு சேவையின் இருப்பும் என்ற தலைப்பில் நடந்த சிறப்பு கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய போது வி.எஸ்.அச்சுதானந்தன் இவ்வாறு விமர்சனம் செய்தார்.
ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் உரிமை. அதை அரசு மறுக்க முடியாது. ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து 10 விழுக்காட்டை ‘இழக்கச் செய்வதன்’ மூலம் பங்குச் சந்தைகளை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முதன்மையான இலக்காகும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசுக்கு இழப்பே ஏற்படும் என்று முதல்வர் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது அரசு ஏன் இத்திட்டத்தை அமல் நடத்த வேண்டும்? என்று அவர் வினவினார்.
அரசின் முடிவுகள் மூலம் ஓய்வூதிய உரிமையை மறுக்க முடியாது. ஓய்வு பெற்ற பின் அரசு ஊழியர்களின் வாழ்நிலையைக் காப்பாற்றுவதற்காக ஓதுக்கி வைக்கப்பட்ட ஊதியமாகும். இது வேலையில் அமர்த்துவோரின் கருணையால் கிடைக்கும் சலுகையல்ல. நாடாளுமன்றத்தின் சம்மதம் இன்றி பங்களிப்பு ஓய்வூதியம் அரசால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தான் முதல்வராக இருந்த போது, அன்றைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இத்திட்ட அமலாக்கம் குறித்து பலமுறை கடிதம் எழுதினார். இடது ஜனநாயக முன்னணி அரசு அத்திட்டத்தை நிராகரித்து விட்டது. யுடிஎப் அரசு பதவிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே அரசு ஓய்வூதியத்துக்கு சாவுமணி அடித்ததுதான் என்று அவர் விமர்சனம் செய்தார். அரசு வருமானத்தின் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளமாகவும் ஓய்வூதியமாகவும் செலவாகிறது என்றுமுதலாளித்துவ அரசுகள் மக்களிடையே தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மக்களை அரசு ஊழியர்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள். சமுதாய அர்ப்பணிப்பு இன்மை, கடமை தவறுதல், லஞ்சம் ஆகியவற்றை வேறுவிதமாகப் பார்க்க வேண்டும். அவை கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்பட்டவையாகும் என்றும் அவர் சொன்னார்.
பங்களிப்பு ஓய்வூதியம் சமுதாயப்பாதுகாப்பை அழித்து விட்டு, அரசுப்பணியை அழித்திட வழி வகுக்கும். இத்திட்டம் புதிதாக நியமனமாகும் ஊழியர்களுக்கு மட்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் தற்போதைய ஊழியர்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. அதற்கான சட்டப்பிரிவுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டமுன்வரைவில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கத்துக்கு சிபிஐ தலைவர் சி.திவாகரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். கருத்தரங்கத்தில் புரட்சி சோசலிஸ்ட் கட்சி தலைவர் என். கே.பிரேமசந்திரன், சிபிஐ தலைவர் சி.என்.சந்திரன், கேரள என் ஜிஓ சங்க பொதுச்செயலாளர் ஏ.ஸ்ரீ குமார், கேரளா என்ஜிஓ அமைப்பு தலைவர் கோட்டதலா மோகனம் ஆகியோர் உரையாற்றினர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.